பிரிட்டனில், ஒரு சர்ச்சௌக்குரிய முத்த்தம் அமைச்சரின் பதவியை பறித்து விட்டது. ஆம், முத்தமிடுதல் என்பது அப்படி ஒன்றும் தவறான செயல் அல்ல என்றாலும் பிரிட்டன் சுகாதார அமைச்சர் கொரோனா கால சமூக இடைவெளியினை மறந்து முத்தமிட்டது பெரும் சர்ச்சையாயிற்று, சட்டத்தை மதிக்காத அமைச்சர்  என்ற பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழும்பின


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிப்பு குரல்கள் வலுவானதால், பிரிட்டனின் சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் (Matt Hancock) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமூக இடைவெளி விதியை மீறி சுகாதார அமைச்சகத்தில் தன்னுடன் பணிபுரிந்த தனது சக ஊழியரை  முத்தமிட்டதால், பதவியை இழக்க நேரிட்டது.


பிரதமரிடம் சமர்பிக்கப்பட்ட ராஜினாமா  


பிரதமருக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், மாட் ஹான்காக், இந்த தொற்றுநோய்களில் சாதாரண மக்கள் செய்த தியாகங்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நாம் ஏதாவது தவறு செய்தால், அதற்கு நாம் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். கொரோனாவின் 'வழிகாட்டுதல்களை மீறியதற்காக' மன்னிப்பு கோருகிறேன் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு (Boris Johnson) அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ | North Korea: எங்கள் நாட்டில் கொரோனா இல்லவே இல்லை; அடித்து கூறும் கிம் ஜாங் உன்


புகைப்படம் மூலம் விஷயம் அம்பலம்


சுகாதார அமைச்சராகவும், சுகாதார அமைச்சகத்தில் பணியாற்றிய ஜினா கொலடங்கேலோவின் புகைபப்டம் ஒன்று வெளியானது. அந்த புகைப்படம் மே 6 அன்று எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டு


இந்த புகைப்படம் வெளியானதை அடுத்தும், அவர் ராஜினாமா செய்யக் கோரும் எதிர் கட்சிகள், சுகாதார அமைச்சருடன் பணிபுரிபவர்களுக்கு, நாட்டின் சுகாதார  நலன் சார்ந்த விதிகளை, கடைபிடிப்பதில் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்ற நிலையில், அவர்களே சமூக இடைவெளி விதிகளை மீறுவது பொதுமக்களுக்கு ஒரு தவறான செய்தியை கொடுப்பதாக இருக்கும் என கடுமையாக விமர்சனம் செய்தனர் . சர்ச்சை அதிகரித்த பின்னர், ஹான்காக் பதவியை ராஜினாமா செய்தார். 


ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR