என் கணவரை வாடகைக்கு எடுத்துக்கோங்க... வெறும் 3000 ரூபாய் தான் - பெண்ணின் வைரல் ஐடியா
பிரிட்டன் பெண் ஒருவர் தனது கணவரை வீட்டு வேலைகளை செய்ய ஒரு நாளுக்கு 3000 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
பிரிட்டன் நாட்டில் வசித்து வரும் தம்பதியினர் லாரா யங் - ஜேம்ஸ். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3 குழந்தைகளில் இருவருக்கு ஆடிஷம் எனப்படும் மூளை வளர்ச்சி பாதிப்பு உள்ளது.
இதனால் தான் ஒருவராக லாரா யங் 3 குழந்தைகளை பார்த்துக்கொள்வது சாத்தியமில்லாத விஷயமாக மாறிவிட்டது. தந்தை ஜேம்ஸ் அதுவரை தனது வீட்டின் அருகிலுள்ள தொழிற்பட்டறையில் வேலை செய்து வந்தார்.
பின் மனைவி, பிள்ளைகளை பார்த்துக்கொள்ள தனது முழு நேர வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துவிட்டார். இதனால் லாரா யங்கின் வேலை பலுவும் குறைந்தது.
ஆனால் இருவருக்கும் வருமானம் இல்லை என்ற நிலையில் அவர்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணமும் குறையத்தொடங்கிவிட்டது. முழு நேர வேலைக்கும் இருவராலும் செல்ல முடியாது என்பதால் சற்று திணறினர்.
மேலும் படிக்க |IBPS Clerk 2022 ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது, நாளை முதல் பதிவு துவக்கம்
கணவர் ஜேம்ஸை பொருத்தவரை, அவர் எப்போதுமே ஏதேனும் வீட்டு வேலை செய்துக்கொண்டே இருப்பார். தண்ணீர் பைப்பில் பிரச்சனை என்றாலோ, தோட்டத்தை சுத்தம் செய்யவேண்டும் என்றாலோ லாரா இதுவரை வெளியில் இருந்து யாரையும் பணம் கொடுத்து கூப்பிட்டு பணிபுரிய வைத்ததில்லையாம். அதேபோல் வீட்டிற்கு தேவையான டைனிங் டேபிள், கட்டில் என அனைத்து மரச்சாமான்களையும் அவர் தன் கைகளால் செய்தார் என்பதும் சிறப்பம்சமே.
அப்போதுதான் லாரா யங்கிற்கு ஒரு யோசனை வந்தது. உடனடியாக வெப்சைட் ஒன்றை உருவாக்கி அதில் 'ரென்ட் மை ஹேண்டி ஹஸ்பண்டு' என்று விளம்பரமும் செய்துள்ளார். அதுவும் 35 யுரோவுக்கு வாடகைக்கு விடப்படும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் சிறப்பம்சமாக தன் கணவர் ஜேம்ஸ் குறிப்பிட்ட வேலையை மட்டுமல்லாமல் வீட்டிற்கு தேவையான அனைத்து வேலையையும் ஒற்றை ஆளாய் நின்று முடித்து தருவார் என்றும் அவர் தன் கணவரின் பெருமையை விளக்கிக்கூறியிருந்தார்.
இவரது இந்த யோசனை அவர் திட்டமிட்டது போல சரியாக வேலை செய்தது. பலர் ஜேம்ஸை 35 யூரோவுக்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டனர். வேளி அமைப்பது, டிவியை சுவற்றில் செட் செய்வது என பல்வேறு வகையான வேலைகளுக்கு ஜேம்ஸ் வாடகைக்கு எடுக்கப்பட்டார்.
மேலும் படிக்க | Best SIP: பம்பர் வருமானம் பெற இந்த 3 எஸ்ஐபி-களில் முதலீடு செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR