உக்ரைன் மீது 14-வது நாளாக ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் இணைந்து சண்டையிடலாம் என உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று ஏராளமானோர் ராணுவத்தில் இணைந்து, ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதில், பாஷா லீ என்ற நடிகர் கடந்த வாரம் உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார். இர்பின் நகரில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற சண்டையில் பாஷா லீயும் பங்கேற்றிருந்த நிலையில் ரஷ்ய படைகளின் குண்டு வீச்சுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். லீயின் மரணத்தை உக்ரைன் பத்திரிகையாளர் சங்கமும், ஒடேசா சர்வதேச திரைப்பட விழாவின் உறுப்பினர்களும் உறுதி செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை


முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று பஷா லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், கடந்த 48 மணிநேரமாக ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து நமது வீரர்கள் போராடியதை கண் முன்னே பார்க்க நேர்ந்தது, இந்த சூழலிலும் நாங்கள் சிரிக்கிறோம்  - உக்ரைனுக்காக தொடர்ந்து போராடுவோம் என பதிவிட்டிருந்தார்.


 



 


33 வயதான பாஷா லீ நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பல்வேறு திறமைகளைக் கொண்டவர் ஆவார். அவர் நடிப்பில் வெளியான படங்களில் மீட்டிங் ஆஃப் க்ளாஸ்மேட்ஸ், ஷ்டோல்னியா, ஷேடோஸ் ஆஃப் அன்ஃபர்காட்டன் ஆன்செஸ்டர்ஸ், தி ஃபைட் ரூல்ஸ் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.  உலகெங்கும் வரவேற்பை பெற்ற தி லயன் கிங் திரைப்படத்தில் இவர் டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளார். பாஷா லீயின் மறைவால் உக்ரைன் மக்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | குண்டு மழைக்கு நடுவே முத்த மழை... போர்க்களத்தில் நடந்த திருமணம்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR