உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், தினந்தோறும் போர் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இன்று இரண்டு அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாஸ்பரஸ் குண்டு என்றால் என்ன? அந்த வெடிகுண்டை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது உண்மையா?


உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவினர் ரஷ்யா வீசிச்சென்ற வெடிக்காத குண்டை தண்ணீர் மூலம் செயலிழக்க செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பெரிய அளவிளான வெடிகுண்டை இரண்டு பேர் செயலிழக்க வைக்க முயற்சி செய்கின்றனர். அதுவும் தண்ணீர் ஊற்றி அவர்கள் பொறுமையாக வெடிகுண்டை செயலிழக்க செய்கின்றனர். இந்த திக் திக் நிமிடங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | ரஷ்யா - உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்


 



முதல் வீடியோ இப்படி இருக்க, அடுத்த வீடியோவில் உக்ரைனின் ராணுவப்படை ரஷ்யாவின் ஜி டேங்க்கை சுட்டு வீழ்த்துகிறது. இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ராணுவ டேங்க் நிலைகுலைந்து போகிறது. இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ரஷ்யா - உக்ரைன் போரால் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR