பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்த ஐ.நா.சபை
எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் எப்பொழுதும் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனை கண்காணிக்க எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஐ.நா. ராணுவ குழுவின் வாகனம் நிறுத்த பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவம் ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவின் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது என பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டது. இதைக்குறித்து பாகிஸ்தான் ஐ.நா.சபையில் இந்தியாவிற்கு எதிராக குற்றச்சாட்டியது.
ஆனால் ஐ.நா. சபை இந்த குற்றச்சாட்டில் உண்மை கிடையாது என கூறி நிராகரித்துவிட்டது.