ஏப்ரல் 9 முதல் 13 வரை பிரட்டன்-ல் சமோசா வாரம்!
லண்டன் உட்பட சில முக்கிய பெருநகரங்களில் ஏப்ரல் 9 முதல் 13 வரை சமோசா வாரமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டமானது முதல் முறையாகும்
லண்டன் உட்பட சில முக்கிய பெருநகரங்களில் ஏப்ரல் 9 முதல் 13 வரை சமோசா வாரமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டமானது முதல் முறையாகும்
பிர்மிங்காம், மான்செஸ்டர், கொவெண்ட்ரி, நாட்டிங்காம்ஷைர், ராட்லெட் ஆகிய நகரங்களில் இந்த சமோசா வாரம் கொண்டாடப்பட உள்ளது.
இந்த சமோசா வாரத்தின் போது சமோசா உண்ணும் போட்டி நடத்தப்பட உள்ளது. மேலும் சிறந்த சமோசா செய்பவர்களுக்கு விருதும் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிகளின் போது வசூலாகும் தொகை, நலத்திட்ட செயல்களுக்காக பயன்படுத்தப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.