ரஷ்யாவுக்கு ட்ரோன்களை வழங்க ஈரான் திட்டமிட்டுள்ளதா: அமெரிக்கா
US on Russia: ஈரான் ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களையும் அதற்கான பயிற்சிகளையு வழங்குகிறதா?
Ukraine Invasion and Drones: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், ஈரான் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வழங்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு இரான் வழங்கவிருக்கும் ட்ரோன்களில் சில ஆயுதங்களை தாங்கும் திறன் கொண்டவை.
ஆளில்லா வான்வழி வாகனங்கள் ஜூலை மாத தொடக்கத்தில் ஆயுதங்களைத் தாங்கிச் செலும் திறன் கொண்ட ட்ரோன்களை பயன்படுத்துவதது தொட்ர்வான பயிற்சி அமர்வுகளை வழங்கியிருக்கலாம் என்று நம்புவதாக அமெரிக்கா கூறுகிறது.
வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கள்கிழமை, ஜூலை 11) செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இவ்வாறு கூறினார்.
உக்ரைன் மீதான போரில் ரஷ்யா எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்று உக்ரைனும் அமெரிக்காவும் கணிக்கும் நிலையில், தற்போது இரானிடம் இருந்து ரஷ்யா ஆயுதங்களை பெறுவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக சல்லிவன் கூறினார்.
மேலும் படிக்க | உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்; 18 பேர் பலி
"இரானிய அரசாங்கம் ரஷ்யாவிற்கு பல நூறு யுஏவிகள் (unmanned aerial vehicles), வழக்க தயாராகி வருகிறது. அதில் ஆயுதம் தாங்கக்கூடிய யுஏவிகளும் அடங்கும்" என்று சல்லிவன் செய்தியாளர்களிடம் கூறினார்.
"இந்த UAVகளைப் பயன்படுத்த ரஷ்யப் படைகளுக்குப் பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. ஆரம்ப பயிற்சி அமர்வுகள் ஜூலை இறுதியில் தொடங்கும்" என்று நம்புவதாக அவர் கூறினார்.
ஈரான் இதுவரை ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கியதா என்பதை நிரூபிக்கும் எந்த விவரங்களையும் சல்லிவன் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
போரில் ட்ரோன்களின் பயன்பாடு
ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரில், இரு தரப்பிலும் ட்ரோன்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. துருக்கிய தயாரிப்பான பைரக்டார் ஆயுதமேந்திய போர் UAVகளைப் பயன்படுத்தி, உக்ரைன் படைகள் தங்களை பாதுகாத்து வருகின்றன.
அதேபோல, அமெரிக்காவும் பிற நட்பு நாடுகளும் பல்வேறு வகையிலான சிறிய ஆளில்லா விமானங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன.
"உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், உக்ரைனை வரைபடத்திலிருந்து துடைக்க முயற்சிக்கும் ரஷ்யாவின் எண்ணம் வெற்றியடையாது என்பதை உணர்த்தும் வகையிலும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்று சல்லிவன் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: உக்ரைன்-ரஷ்யா மோதல் தொடர்பாக ஆன்லைன் உட்பட பல்வேறு தளங்களிலும் பல்வேறு செய்திகள் வெளியாகின்றன. அவ்வப்போது மாறிவரும் இந்த செய்திகளை துல்லியமாகப் வழங்குவதில் ஜீ நியூஸ் கவனம் எடுத்துக் கொண்டாலும், அனைத்து அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் நம்பகத்தன்மையை சுயாதீனமாகச் சரிபார்க்க முடியாது).
மேலும் படிக்க | போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR