தேர்தல் ஹேக்கிங் விவகாரத்தில் ரஷியாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா சபதமிட்டு உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சியினரின் இணையதளங்களில் சட்டவிரோதமாக நுழைந்து, எப்படியெல்லாம் தகவல்களை திருடி, கசிய விட வேண்டும் என்று புதின் தனிப்பட்ட முறையில் சிலருக்கு அறிவுரைகள் வழங்கியதாக அமெரிக்க உளவு அமைப்புகள் நம்புகின்றன. இது தொடர்பான தகவல்களை ‘என்.பி.சி. நியூஸ்’ வெளியிட்டுள்ளது. 


இது தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ரஷியா மற்றும் டிரம்ப் மறுப்பு தெரிவித்தனர்.


இச்சம்பவத்தை குறித்து அதிபர் ஒபாமா கூறியதாவது:- 


அமெரிக்க தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த வெளிநாட்டு அரசாங்கம் முயற்சிக்கும் என்ற நேரத்தில் நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் எந்தஒரு சந்தேகமும் கிடையாது, நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் மற்றும் இடத்தை நாம் தேர்ந்தெடுப்போம். சில நடவடிக்கை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும். சில தகவல்கள் வெளியிடப்படாது. இவ்விவகாரத்தில் புதினுக்கு என்னுடைய உணர்வு என்னவென்று தெரியும், ஏனென்றால் இவ்விவகாரம் தொடர்பாக புதினிடம் நேரடியாகவே நான் பேசி உள்ளேன் என்று கூறியுள்ளார்.இச்சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஜனவரி 20-ம் தேதிக்குள் உளவு அமைப்புகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.