ஜப்பானில், அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானது!
ஜப்பானின் ஒகினாவா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை விமான விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது!
ஜப்பானின் ஒகினாவா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை விமான விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது!
டோக்கியோ: ஜப்பானின் தெற்கு தீவான ஒகினாவா கடலில் அமெரிக்க கடற்படை போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த போர் விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒகினாவாவின் தலைநகரான நஹாவின் கிழக்கு-தென்கிழக்காக சுமார் 250 கிலோமீட்டர் (156 மைல்) தொலைவில் இன்று காலை சுமார் 11:45 (0245 GMT), மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒசாமா கோசாகாய் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் உதவியின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தானது விமான என்ஜின் கோளாறு காரணமாக நிகழ்ந்தது, எனவும் அச்சுறுத்தல் ஏற்படும் நோக்கத்தில் நிகழவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அரிகில் உள்ள கடலோரப் பகுதிகளில் ஏதேனும் எண்ணெய் படலம், விமான கழிவுகள் உள்ளதா என்பதை கண்டறிய ஜப்பான் கடல்படை விமானம் விரைந்துள்ளது என கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் மொத்த நிலப்பகுதியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவினை கொண்டுள்ளது ஓகினாவா தீவு. ஆனால் ஜப்பானில் உள்ள சுமார் 47,000 அமெரிக்க இராணுவ நிலையங்களில் சரிபாதி அளவினை கையாண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.