போதை பொருட்களை கடத்த பலரும் பல வித்தைகளை கையாண்டு வரும் நிலையில் ஐக்கிய நாடுகளை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பில் வைத்து போதை பொருள் கடத்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூர்யா நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் 'அயன்'. இத்திரைப்படத்தில் சூர்யா பல யுக்திகளை கையாண்டு போதை பொருட்களை கடத்துவார். படத்தை பார்த்தவர், இப்படியெல்லாம் கடத்தல் மேற்கொள்ளலாமா என ஆச்சரிய பட வைத்த திரைப்படம் அது,. ஆனால் அந்த படத்தில் வரும் காட்சிகளை காட்டிலும் வியக்கவைக்கும் வகையில் ஐக்கிய நாட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கடந்த திகங்கள் அன்று ஐக்கிய நாட்டின் நியூகேஸ்டல் பகுதியை சேர்ந்த 21-வயது இளைஞன் மதுபோதையில் கார் ஓட்டி வந்ததற்காக நியூகேஸ்டல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வின் போது இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் காவல்நிலையத்திற்கு கொண்டுச்செல்ல நேர்ந்துள்ளது.


இந்நிலையில் காவல்துறைக்கு கொண்டு செல்லப்பட்ட வாலிபர் விழியில் தன் கால்சட்டைக்குள் கைவிட்டு எதையோ மறைப்பதினை காவலர்கள் கவனித்துள்ளனர். பயணத்தின் போது விட்டுபிடித்த காவலர்கள், காவல்நிலையத்தில் விசாரணையின் போது இதுகுறித்து விசாரித்துள்ளனர்.


பின்னர் சோதனையில் அவர் தனது ஆணுறுப்பில் போதை பொருள் பாக்கெட்டினை கட்டி கொண்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.


இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரின் மீது Class A போதைப்பொருளை கடத்தியதாக புகார் பதியப்பட்டுள்ளது,. மேலும் பொது இடத்தில் போதை பொருளை உட்கொண்டு பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.