டொனால்டு ட்ரம்ப் இன்று பிரதமர் மோடியுடன் உரையாடுவார்
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரவு பேசுகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் மோடியுடன் இன்று உரையாட இருப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:- இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணியளவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் உரையாட இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக டொனால்டு ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.