ஐ.நாவின் ஆயுதத் தடையை மீறியதற்காக இரானுக்கு எதிராக  டிரம்ப் நிர்வாகம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தனது நட்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது அமெரிக்கா.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.நா. தீர்மானத்தின் கீழ், இரானின் பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி அமைப்பு உள்ளிட்ட 27 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதில் வெனிசுலாவின் தலைவர் நிக்கோலா மதுரோ (Nicolas Maduro)வுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


"அமெரிக்கா இப்போது இரான் மீதான ஐ.நா பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்துள்ளது" என்று டிரம்ப் மேலும் கூறினார், "இரானிய ஆட்சிக்கும் இரானுக்கு ஆதரவாக நிற்க மறுக்கும் சர்வதேச சமூகத்தில் உள்ளவர்களுக்கும் தெளிவான செய்தியை இன்றைய எனது நடவடிக்கைகள் அனுப்புகின்றன" என்று டிரம்ப் தெளிவாகக் கூறினார்.


செளதி எண்ணெய் நிலையங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியது. எது எப்படியிருந்தாலும், தங்களுக்கு பொருளாதாரத் தடைகள் ஒன்றும் "புதிதாக இல்லை" என்றும், இந்த்த் தடைகளால் தங்கள் நாட்டுக்கு எந்தவித விளைவும் இருக்காது என்றும் இரான் கூறிவிட்டது.


Read Also | பாகிஸ்தானில் பெண்களை கற்பழிப்பவர்களில் பெரும்பாலானோர் குடும்ப உறுப்பினர்களே!


"இரானுக்கு தன்னால் முடிந்த அனைத்து அழுத்தங்களையும் அமெரிக்கா கொடுத்துள்ளது. இந்த பொருளாதாரத் தடைகள், இரானை மண்டியிடச் செய்யும் என்று அந்நாடு நம்பியது. ஆனால் அமெரிக்கா நினைத்தது நடக்கவில்லை" என்று இரானின் வெளியுறவு அமைச்சர் ஜரீஃப் (Zarif) கூறினார்.


இரானின் பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படை தளவாடங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் அமைப்பு இயக்குனர் மெஹர்தாத் அக்லகி-கெடாப்சி (Mehrdad Akhlaghi-Ketabchi), அணுசக்தி அமைப்பின் மூத்த அதிகாரிகள் மற்றும் திரவ உந்துசக்தி பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பான ஷாஹித் ஹெம்மத் தொழில்துறை குழுமம் (liquid propellant ballistic missile organization, Shahid Hemmat Industrial Group) என பல அமைப்புகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.


"நீங்கள் யாராக இருந்தாலும் சரி, இரான் மீதான ஐ.நா. ஆயுதத் தடையை மீறினால், பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வீர்கள்" என்று ஐ.நா பொதுச் செயலாளர் பாம்பியோ கூறினார்.


இரான் மீது ஆயுதத் தடை உட்பட ஐ.நாவின் பொருளாதாரத் தடைகளும் இருப்பதாக  டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.