புது டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மில்லியன் கணக்கான பிரச்சனைகளை எழுப்பினாலும், உலகில் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு சில விருப்பங்கள் இருப்பதாக ஒரு அமெரிக்க மதியுரையகம் குழு தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையின் (Congressional Research Service - சிஆர்எஸ்) அறிக்கையில், பல வல்லுநர்கள் இந்த பிரச்சினையில் பாகிஸ்தானின் நம்பகத்தன்மை மோசமானது என்று கூறியுள்ளனர். ஏனெனில் அது பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து வருகிறது. ஆறு மாதங்களுக்குள் காஷ்மீர் குறித்த தனது இரண்டாவது அறிக்கையில், சிஆர்எஸ் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் நிலைமையை மாற்றுவதற்கான பாகிஸ்தானின் திறன் சமீபத்திய ஆண்டுகளில் குறைந்துவிட்டது என்று கூறியுள்ளது.


ஜனவரி 13 ஆம் தேதி சிஆர்எஸ் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆகஸ்ட் 5 க்குப் பிறகு, பாகிஸ்தான் "இராஜதந்திர ரீதியாக மட்டுமே" நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. அதற்கு ஒரே ஒரு துருக்கி நாடு மட்டுமே ஆதரவு அளித்துள்ளது. மற்ற நாடுகள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அதை யூனியன் பிரதேசமாக மாற்றிய பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உறவு மோசமடைந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெற பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இருப்பினும், இது முற்றிலும் உள்விவகாரம் என்று இந்தியா தெளிவுபடுத்தி உள்ளது.


25 பக்க அறிக்கையில், பாகிஸ்தான் சீனாவின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் (United Nations Security Council) முதல் முறையாக காஷ்மீர் பற்றி விவாதிக்க ஆகஸ்ட் 16 அன்று கூடியது. இந்த கூட்டம் கதவுகள் மூடிய அறையில் நடைபெற்றது. அதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.