வீடியோ: கண்னை கவரும் அழகிய பாண்டாஸ்!
சீனா ஜெய்ண்ட் பாண்டா பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெற்றிகரமாக 42 பாண்டா குட்டிகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 36 பாண்டாக்கள் 2017-ஆம் ஆண்டில் பிறந்தவை ஆகும்.
ஒரே ஆண்டில் 36 குட்டிகளை இனப்பெருக்கம் செய்தது அம்மையத்தின் வரலாற்றுச் சாதனையாகும்.
ஒரு குழந்தை பாண்டா வளர்கும் செயல்முறை என்பது மிகவும் சுவாரஸ்யமானது, அதே சமயம் மிகவும் கடினமானதும் கூட, ஏனென்றால் அவை மிகவும் பலவீனமானவை. எளிதில் உடல்நிலை குறைவால் இறந்துவிடும் தன்மை கொண்டவை.
அழகிய இப்பாண்டாக்களின் வளர்ப்பு முறை மற்றும் அவை எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பது குறித்து ஆராய்ச்சி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
நீங்களும் பார்த்து மகிழுங்கள்!