விலங்குகளுடன் பாகுபலி போல் சகச்சம் புரியும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளைஞரின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகுபலி படத்திற்கு பின்னர் தங்களையும் பாகுபலியாய் கருதிக்கொண்டு பாறைகளை தூக்குவதும், யானைகளை அடக்குவமாய் கிராப்பிக்ஸ் உதவியுடன் பேஸ்புக்கில் கலக்கி வருகின்றனர்.


ஆனால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த செயல்களை எல்லாம் தொழில்நுட்ப உதவிகள் இன்றி தானாக செய்து வருகின்றார். ரானே கசேல்சௌக்கி என்றழைக்க்ப்படும் இவர் விலங்களை பயிற்றுவிப்பதில் வல்லவர். அதே வேலையில் சர்கஸிலும் தனது யானைகளுடன் பல சாகசங்களை புரிந்து வருகின்றார்.




 



தான் பயிற்றுவித்த யானையின் மீது இவர் நின்று அடிக்கும் சம்மர் சால்ட் பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பல ஆண்டுகளாக விலங்குளுடன் பழகி வரும் இவருக்கு இந்த சாகசங்கள் பெரிதாக தெரிவிதில்லை எனினும் பார்பவர்களை இது கவராமல் இருக்க வாய்ப்பில்லை.


தனது சாகச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் இவரின் இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்பவர்கள் தற்போது 30.3k எட்டியிருப்பது குறிப்பிடத்தகது.