விண்வெளியும், அதைச் சுற்றியுள்ள அதிசயங்களும் எப்போதுமே நமக்கு ஆச்சர்யம் அளிக்கக் கூடியவை. ஆனால், நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் விண்வெளியின் பல அம்சங்களை நம்மால் எளிதாக உணர முடிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனடாவைச் சேர்ந்த கிறிஸ் ஹாட்ஃபீல்ட் என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் ஈரத்துண்டைப் பிழிந்து பரிசோதனை செய்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது. ஹாட்ஃபீல்ட் ஈரத்துண்டைப் பிழிந்த பிறகு புவியீர்ப்பு விசை இல்லாததால், தண்ணீர் தரையில் விழுவதற்குப் பதிலாக, துண்டைச் சுற்றி ஒரு குழாய் போல உருவாகிறது. 


கவனமாகக் கையாளாவிட்டால் இந்த தண்ணீர் கையில் ஜெல் போல ஒட்டிக் கொள்ளும் என கிறிஸ் ஹாட்ஃபீல்ட் விளக்கமளிப்பது போல் இந்த வீடியோ அமைந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. 


மேலும் படிக்க | Afghanistan Earthquake : ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 250 பேர் பலி



விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட் சர்வதேச விண்வெளி நிலையத்தின் தளபதியாக பணியாற்றியுள்ளார். மேலும், விண்வெளி நிலையத்திற்கு வெளியே அதிக செயல்பாடுகளைச் செய்த முதல் கனடா விண்வெளி வீரர் என்ற பெருமையையும் கிறிஸ் ஹாட்ஃபீல்ட் பெற்றுள்ளார்.


மேலும் படிக்க | இஸ்ரேலில் மீண்டும் அரசியல் நெருக்கடி; கூட்டணி அரசு கலைந்தது


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR