ஊழியர் இறந்துட்டாரு, ஆனா வியாபாரம் முக்கியம் தானே: பிரேசில் சூப்பர் மார்கெட்
கலியுகத்தில் உயிரை விட பணம் தான் முக்கியம் என்பதை பிரேசிலில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் நடந்த சம்பவம் உறுதி படுத்தியுள்ளது.
பிரேசிலில் கேரிஃபோர் என்ற ஒரு சூப்பர் மார்க்கெட் உள்ளது (Carrefour). அங்கே காலையில் பணிக்கு வந்த ஊழியர் ஒருவர் துரதிஷ்ட வசமாக இறந்து விட்டார்.
அவருக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அதன் பிறகு, அது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அவரது உடலை குடைகள் கொண்டு மறைத்து, தனது வழக்கமான வர்த்தக பணிகளை தொடங்கி விட்டது.
இந்த சம்பவம் நிகழ்ந்தது ஆக்ஸ்ட் 14ம் தேதி. அதன் பின்னர், இந்த புகப்படம் சமூக ஊடகங்களில் பரவி மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திய பிறகு, இப்போது மன்னிப்பு கோரியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரேசிலின், கேரி ஃபோர் சூப்பர் மார்கெட், பாதிக்கப்பட்ட ஊழியருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது என்றும், அவரது உடலை அப்புறப்படுத்த வேண்டாம் என அவசர கால நடவடிக்கை குழு பரிந்துரைத்ததாகவும் கூறியது.
ALSO READ | சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங்க; குலை நடுங்க வைக்கும் கொரிய அதிபர் உத்தரவு