அதிர்ச்சி சம்பவம்! தன்னை கொல்ல வந்த கசாப்பு கடைக்காரரை போட்டுத் தள்ளிய பன்றி!
Pig Kills Butcher: பன்றி ஒன்று இறைச்சிக் கடைக்காரரைக் கொன்று குவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பன்றி ஒன்று இறைச்சிக் கடைக்காரரைக் கொன்று குவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, 61 வயதான கசாப்புக் கடைக்காரர் பன்றியால் தாக்கப்பட்டார் என்றும், அவருக்கு 40-சென்டிமீட்டர் (15 அங்குலம்) ஆழத்திற்கு காயங்கள் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவர் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஷீயுங் சுய் இறைச்சிக் கூடத்தில் தரையில் விழுந்து கிடந்தார் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
கசாப்புக் கடைக்காரர் பன்றியைக் கொல்லத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், கதை தலைகீழானது. முன்னதாக, பன்றியை கொல்ல கசாப்புக் கடைக்காரர் ஏற்கனவே மின்சார துப்பாக்கியால் சுட்ட நிலையில், பன்றி மயங்கி விழுந்திருந்தது., ஆனால் அது எதிர்பாராத விதமாக சுயநினைவு அடைந்து, ஆத்திரமடைந்து அவரை கீழே தள்ளி தாக்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கையில் இறைச்சிக்காக பன்றியை கொள்வதற்காக அரிவாளுடன், இடது காலில் ஆழமான வெட்டு காயத்துடன் அந்த நபர் சுயநினைவின்றி இருந்ததை சக பணியாளர் ஒருவர் கண்டுபிடித்து தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மேலும் படிக்க | பிரளயம் நெருங்கிறதா... எதிர் திசையில் சுழலத் தொடங்கும் பூமியின் உள் மையம்!
"விபத்துக்கான காரணத்தை கண்டறியவும், அன்று பணியில் இருந்தவர்களின் பொறுப்பைக் கண்டறியவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் விரைவில் விசாரணை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என காவல் துறை மேலும் தெரிவித்தது. பணி பாதுகாப்புச் சட்டத்தை மீறினால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஒரு அறிக்கையில், நகரின் உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை, கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுபவர்களின் நலனை கருத்தில் கொள்கிறது என கூறிய நிலையில், பன்றியால் கொல்லப்பட்ட அந்த நபரின் குடும்பத்திற்கு தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தியது.
வீட்டுப் பன்றிகள் பொதுவாக அமைதியாக இருக்கும் என்றாலும், அவை ஆத்திரமுற்று கிளர்ந்தெழுந்தால், அவை அடக்கமுடியாத நிலைக்கு சென்று விடும் என்றும், அவை ஆக்கிரோஷமாக, மனிதர்களைத் தாக்கி, மிதித்தல், உதைத்தல் மற்றும் கடித்தல் ஆகியவற்றால் கடுமையான காயங்களையும் ந்பாதிப்புகளையும் ஏற்படுத்தும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது. அச்சம்பவம் குறித்து நகர தொழிலாளர் துறை விசாரணையை துவக்கியுள்ளது. அந்த நபரின் மரணம் குறித்து தொழிலாளர் துறை வருத்தம் தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ