ரஷ்யா உக்ரைன் போர்: உக்ரைனுடனான போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தற்போது வெளிவந்துள்ள புடினின் படத்தில், அவரது கை விரல்கள் வீங்கியுள்ள தோற்றம் பல விதமான கவலைகளை எழுப்பியுள்ளது. உண்மையில், புடின் வீங்கிய விரல்களுடன் நாற்காலியை இறுக்கமாகப் பிடித்தபடி காணப்பட்டார். செவ்வாய்கிழமை (நவம்பர் 22) கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் உடன் நடத்திய சந்திப்பில் எடுக்கப்பட்ட புடின் புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் தனது நடுங்கும் கால்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும் அவரது கைகளில் ஊதா நிற புள்ளிகள் காணப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது மட்டுமின்றி, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் டயஸ்-கேனலுடன் பேசிக் கொண்டிருந்த போது, ​​வீங்கிய முகத்துடன் அதிபர் விளாடிமிர் புடின் வித்தியாசமாக சிரித்துக்கொண்டே இருந்தார் எனவும் கூறப்படுகிறது. அவரது இடது கை அவர் அமர்ந்திருக்கும் நாற்காலியின் கையை இறுக்கமாக பற்றி இருந்ததை காண முடிந்தது. புடின் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயல்கிறார் என்பது போன்று தோன்றியது.


புடினுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக பரவும் தகவல்


பிப்ரவரியில் உக்ரைன் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, விளாடிமிர் புடின் ஒருவித நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியான வதந்திகள் பரவி வருகின்றன. 70 வயதான ரஷ்ய அதிபரின் உடல்நிலை குறித்து பல விதமான தகவல்கள் வெளியாயின. அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டது. புடினுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை மறுத்து கிரெம்ளின் மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக வெளியான செய்தியில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் இரு வேறு கருத்துக்களை கொண்டிருப்பதாக தெரிகிறது.


மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்


 கடந்த மே மாதம், கசிந்த ஒரு ஆடியோவில் கிரெம்ளினுடன் தொடர்புடைய தன்னலக்குழுக்கள் புடினுக்கு இரத்த புற்றுநோய் இருப்பது குறித்து பேசியதை கேட்க முடிந்தது. இந்த பதிவு நியூ லைன்ஸ் இதழ் மூலம் வெளியிடப்பட்டது.  ரஷ்ய அதிபர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறப்பட்டது. மாஸ்கோ வெற்றி தின அணிவகுப்பைத் தொடர்ந்து புடினின் உடல் நிலை குறித்த பல்வேறு ஊகங்களுக்குப் பிறகு இந்த ஆடியோ கசிந்தது. ரஷ்ய தலைநகரில் நடந்த நிகழ்ச்சியில் ரஷ்ய தலைவர் தனது காலில் போர்வை போர்த்திக் கொண்டு இருப்பதை புகைப்படத்தில் காணலாம். ஜூன் மாதம், அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. அதில் புட்டினின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறிப்பட்டது. 


மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR