பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டு பதிய சற்று முன்பு துவங்கியது. மேலும் ஓட்டு  எண்ணிக்கை இன்றிரவே துவங்குகிறது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


 



 


இந்தமுறை பாகிஸ்தான் பொதுத்தேர்தலை உலக நாடுகளை அதிக கவனமாக கவனித்து வருகிறது. ஏனெனில் கடந்த 2013 ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி என் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டார். ஆனால் இந்த முறை நவாஸ் ஷெரிப் சிறையில் உள்ளார். இதனால் இந்த தேர்தல் முக்கிய கவனம் பெற்றுள்ளது.


இரண்டாவது முறையாக ஆட்சி பிடிக்க வேண்டும் என நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியும், முதல் முறையாக ஆட்சி கட்டிலில் அமர பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டனர். 


இந்த இரண்டு கட்சிக்கும் நேரடியாகவே பலத்த போட்டி ஏற்பட்டு உள்ளது. நவாஸ் ஷெரிப் சிறை சென்றுள்ளதால், பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவருடைய சகோதரர் ஷெபஸ் ஷெரிப்பை முன்னிறுத்தி உள்ளனர். இந்த இரண்டு கட்சியை அடுத்து, அதிக பேசப்படும் இன்னொரு கட்சி பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி. இந்த கட்சியும் நாடு முழுவதும் பிரசாரத்தை மேற்கொண்டது. 


இம்முறை பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பழங்குடியினரருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்பது சிறப்பு. இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு துவங்கி உள்ள நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறும். 


ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 200-க்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பதட்டமான வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் பொதுத் தேர்தல் இன்று நடக்கிறது. நவாஸ் கட்சிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. மேலும் இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று இரவே துவங்குகிறது.


சிறையில் இருந்த நவாசுக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது சிறுநீரகம் செயலிழந்துள்ளதாக தெரிகிறது. சிறையில் இருந்தபடியே நவாஸ் பேசும் வீடியோவை அவரது மகள் மரியம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


பாகிஸ்தானில், 85 ஆயிரம் ஓட்டுப் பதிவு மையங்களில், மக்கள் இன்று ஓட்டளிக்க உள்ளனர். இதற்கான ஓட்டு பதிய சற்று முன்பு துவங்கியது.