Weird News: 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி!
Weird News: தனது 100வது பிறந்தநாளை கொண்டாடிய பெண்மணி திடீரென கைது செய்யப்பட்டார். போலீஸ் எதற்காக வந்தது என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.
சில விசித்திரமான ஆசைகளை பற்றி நீங்கள் கேட்டிருக்க கூடும். அதை நிறைவேற்ற சிலர் எந்த நிலைக்கும் செல்ல தயாராகின்றனர். ஆனால் யாரையாவது கைது செய்ய வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இது என்ன வகை ஆசை என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா... அதுவும் யாரேனும் தங்களைக் கைது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் என்று கூறினால், அதிர்ச்சியும் ஆச்சர்யமும் மேலிடுகிறது. ஆனால் ஒரு பெண் தனது 100வது பிறந்தநாளில் தன்னைக் கைது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார், அதுவும் நிறைவேறியது. உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என சிலர் ஆசைப்படலாம் அல்லது பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என் ஆசைப்படலாம். ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டும் என ஆசைப்படலாம். ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜீன் பிகெண்டனின் (Jean Bickenton) என்ற பெண்மணி கண்ட கனவு நிச்சயம் விசித்திரமானது தான்
ஜீன் பிகெண்டன் என்ற அந்த பெண்மணி தனது 100வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தனது ஆசையை நிறைவேற்ற, போலீசார் அங்கு வந்து மிகுந்த அன்பு, மரியாதையுடன் அவரை கைது செய்தனர். இந்த விசித்திரமான சம்பவம் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜீன் பிக்கென்டன் பல வருடங்கள் இராணுவ செவிலியராக பணிபுரிந்தார். அவர் வாழ்க்கையில் ஒரு முறை கூட கைது செய்யப்படவில்லை. இந்த கனவை நனவாக்க, அவர் தன்னை கைது செய்ய வேண்டும் விருப்பம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | Viral News: 8 மனைவிகளுக்கும் ஒரு அரண்மனை; டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் நபர்!
அதனை நிறைவேற்ற, போலீஸார் அங்கு சென்று பெண்மணியை கைது செய்தனர். இந்த சம்பவத்தை விவரித்து, விக்டோரியா போலீசார் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். எதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்று அங்கிருந்தவர்கள் போலீசார் கெள்வி எழுப்பினர். போலீசார் அந்த பெண்மணியை ரொம்பவும் மரியாதையுடன் கைவிலங்கிட்டு அதிகாரப்பூர்வமாக கைது செய்தனர். இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்ட ஜீன் பிக்கென்டன் தனது மிக அற்புதமான பிறந்தநாள் விழாக்களில் ஒன்று என்று கூறினார்.
மேலும் படிக்க | Viral News: கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்
மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ