அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கு நேற்று மாலை 7 மணிக்கு சுமார் 11 நிமிடங்களுக்கு தற்காலிகமாக செயலிழந்தது. ஆனால், உடனடியாக கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

@realdonaldtrump என்னும் டொனால்ட் டிரம்பின் கணக்கு, "ஒரு டிவிட்டர் பணியாளரின் மனித பிழை காரணமாக கவனக்குறைவாக செயலிழந்தது" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை டிவிட்டரில் மொத்தம் 41.7 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். நேற்று மாலை டிரம்பின் டிவிட்டர் கணக்கு செயலிழந்தது அதிரிச்சி ஏற்படுத்தியது.


வியாழக்கிழமை மாலையில் டிரம்பின் கணகை பார்க்க வந்தவர்களுக்கு, "மன்னிக்கவும், அந்த பக்கம் இல்லை!" என்று ஒரு செய்தியை மட்டுமே காண முடிந்தது.


கணக்கை மீட்டெடுக்கப்பட்ட பின்னர், டிரம்பின் முதல் டிவீட் குடியரசுக் கட்சியின் வரி குறைப்பு திட்டத்தை குறித்து இருந்தது. அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ கணக்கான @POTUS பாதிக்கப்படவில்லை.