யார் இந்த அசீபா பூட்டோ சர்தாரி? பாகிஸ்தானின் முதல் பெண்மணியாகும் முன்னாள் பிரதமரின் மகள்!
who is Aseefa Bhutto Zardari : பாகிஸ்தானில் முதல் முறையாக நாட்டின் அதிபரின் மகள் முதல் பெண்மணி ஆகிறார்! பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணி அசீபா பூட்டோ சர்தாரி யார் தெரியுமா?
புதுடெல்லி: பாகிஸ்தானின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிப் அலி சர்தாரி தனது மகள் ஆசிஃபா பூட்டோ சர்தாரியை முதல் பெண்மணியாக்க உள்ளார். பொதுவாக இந்த பட்டம் நாட்டின் அதிபரின் மனைவிக்கு வழங்கப்படுவது ஆகும். ஆனால் பாகிஸ்தான் நாட்டின் அதிபர் பூட்டோ தனது மகளை முதல் பெண்மணியாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில், அதிபரின் மகள் ஒருவர், முதல் பெண்மணியாவது இதுவே முதல் முறை என்பதால், யார் இந்த ஆசிஃபா பூட்டோ சர்தாரி என்று பலரும் அறிந்துக் கொள்ள விரும்புகின்றனர்.
ஆசிஃபா பூட்டோ சர்தாரியின் தந்தை ஆசிப் அலி இதற்கு முன்பும் பாகிஸ்தானின் அதிபராக இருந்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் மகள் ஆசிஃபா பூட்டோ என்பதும், பெனசீர் பூட்டோ கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1993ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதியன்று பிறந்த ஆசிஃபா தான், பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி போடப்பட்ட முதல் குழந்தை என்பது குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது. பிரிட்டனில் கல்வி பயின்ற ஆசிஃபா 25 வயதில் முதல் முறையாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.
நாட்டின் முதல் பெண்மணி பாரம்பரியம்
பாகிஸ்தானில், அதிபரின் மனைவி நாட்டின் முதல் பெண்மணி என்பது பாரம்பரிய வழக்கம். அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மனைவி பெனாசிர் பூட்டோ 2007-ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். எனவே, அதிபர் ஆசிப் தனது மகளை முதல் பெண்மணியாக தேர்வு செய்துள்ளார்.
மேலும் படிக்க | போர்க் கைதிகளுக்கு பாலியல் வன்கொடுமை! நாயை விட்டு கடிக்க வைத்த இஸ்ரேல்! UNRWA புகார்
மீண்டும் அதிபரான சர்தாரி
ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பஷ்துன்கா மில்லி அவாமி கட்சியின் (பிகேஎம்ஏபி) தலைவர் மஹ்மூத் கான் அச்சக்சாயை தோற்கடித்துள்ளார். சர்தாரிக்கு 411 வாக்குகளும், அச்சக்சாய்க்கு 181 வாக்குகளும் பதிவாகின.
இரண்டாவது முறையாக அதிபரான சர்தாரி
நாட்டின் 14வது ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்றார். பாகிஸ்தானில் ராணுவத் தலைவர்களைத் தவிர, இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர் சர்தாரி மட்டுமே. 2008 முதல் 2013 வரை பாகிஸ்தானின் அதிபராகவும் சர்தாரி பணியாற்றினார்.
பல புதுமைகள் கண்ட பாகிஸ்தான் தேர்தல் 2024
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின், முதல் பெண் முதலமைச்சர் ஆக, மரியம் நவாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது ஒரு சரித்திர நிகழ்வு என்ரால், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், சீக்கிய சமூகத்தை சேர்ந்த ரமேஷ் சிங் அரோரா முதல் சீக்கிய அமைச்சர் என்ற பெருமையை பெற்றார். தற்போது நாட்டின் முதல் பெண்மணியாக, அதிபரின் மனைவிக்கு பதிலாக மகள் ஆசிஃபா பூட்டோ சர்தாரி இருப்பார் என்பது இந்த ஆண்டு பாகிஸ்தான் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கின்றன.
மேலும் படிக்க | பாகிஸ்தானில் பதவியேற்று கொண்ட சீக்கிய அமைச்சர்... யார் அந்த ரமேஷ் சிங் அரோரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ