கொரோனா பலி எண்ணிக்கையை சொல்லாத சீனாவின் திட்டம் என்ன? WHO கவலை
COVID Deaths In China: கோவிட் மூலம் நாட்டில் ஏற்படும் மரணத்தை வரையறுக்க சீனா பயன்படுத்தும் அளவுரு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது
நியூடெல்லி: சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் களியாட்டம் போட்டு, இன்னும் அடங்காமல் வெவ்வேறு அவதாரங்களை எடுத்து உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், சீனாவில் மட்டும் இன்னும் வைரஸின் தாக்குதல் கட்டுக்குள் அடங்காமல் தலைவிரித்தாடுகிறது. ஆனால், கோவிட் மூலம் நாட்டில் ஏற்படும் மரணத்தை வரையறுக்க சீனா பயன்படுத்தும் அளவுரு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
புதன்கிழமையன்று சீனாவின் கொரோனா பாதிப்பு மற்றும் கோவிட் இறப்புகள் பற்றி கவலை உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சீனா இப்போது COVID-19 பற்றிய கூடுதல் தரவுகளை உடனடியாகக் கிடைக்கச் செய்தாலும், கொரோனாவால் ஏற்படும் இறப்புகளை இன்னும் குறைவாகப் பதிவு செய்கிறது என்றும், பகிரப்படும் எண்கள், தற்போதைய பாதிப்புகளின் உண்மையான தாக்கத்தைக் காட்டவில்லை என்று உலக அமைப்பு நம்புகிறது.
"சீனாவில் இருந்து கொரோனா இறப்புகள் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளன என்று WHO இன்னும் நம்புகிறது" என்று அதன் அவசரநிலை இயக்குனர் மைக்கேல் ரியான் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் படிக்க | Coronavirus: சீனாவில் களியாட்டம் போடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஜப்பான்
சீனாவில் கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது அதற்கும் குறைவான இறப்புகள் பதிவாகியுள்ளன. கோவிட் இறப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் எண்கள் இறுதி ஊர்வலங்களில் காணப்படும் நீண்ட வரிசைகளுடன் ஒத்துப்போகவில்லை என்று ஏற்கனவே அனைவரும் கவலை தெரிவித்து வந்த நிலையில், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ( ஜனவரி 9, 10) கோவிட் இறப்பு தரவுகளை சீனா தெரிவிக்கவில்லை.
தரவுகள் இல்லாததால் கோவிட் மரணத்தை வரையறுக்க சீனா பயன்படுத்தும் அளவுருவை ரியான் குற்றம் சாட்டினார். "பொது சுகாதார அமைப்பில் உள்ள மருத்துவர்கள், கோவிடால் இறப்பவர்களின் தரவுகளை பதிவு செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
விரிவான இடர் மதிப்பீட்டைச் செய்வதற்கு இன்னும் போதுமான தகவல்கள் இல்லை
சீனாவில் இந்த ஆண்டு குறைந்தது ஒரு மில்லியன் கோவிட் தொடர்பான இறப்புகள் ஏற்படலாம் என சுகாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர், ஆனால் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சீனாவில் 5,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக, அந்நாடு தெரிவித்துள்ளது. ஆனால் இது மிகவும் குறைவான எண்ணிக்கை என்று பரவலாக நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | சீனாவில் தடை அகற்றம்! சிக்கலில் பாகிஸ்தான்! பேரழிவை ஏற்படுத்தும் அண்டை நாடு
சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்காவுடன் ஒப்பிட்ட உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை இயக்குனர் மைக்கேல் ரியான், ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸின் துணை மாறுபாடு XBB.1.5 க்கு வந்தபோது பிந்தையது மிகவும் வெளிப்படையானதாக இருந்தது என்று கூறினார்.
"கொரோனா பாதிப்பு தொடர்பான தரவு மற்றும் அதன் தாக்கம் தொடர்பாக அமெரிக்காவிடம் வெளிப்படைத்தன்மை உள்ளது," என்று அவர் கூறினார்.
வாஷிங்டன் இதுவரை உள்ள கொரோனா தொடர்பான அனைத்து தரவுகளையும் வழங்கியுள்ளது, கொரோனாவின் XBB.1.5 வடிவம் கோவிட் நோயைப் பரப்பும் தீவிரமான வைரஸ் என்று கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு சீனா நாட்டில், COVID-19 தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டது, வெளிநாட்டு பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளையும் நீக்கிய சீனாவின் செயலால் அதிர்ந்த பல நாடுகள் சீனாவிலிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தன.
உறுதியான தரவுகளை சீனா வெளியிடாத நிலையில், பிர நாடுகளின் கவலைகளை புரிந்துகொள்வதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ