அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான கண்டணத் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் கட்டடத்தை முற்றுகையிட்டு, வன்முறையில் ஈடுபட தூண்டிவிட்டதாக அமெரிக்க அதிபர் (US President) டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக 232 வாக்குகளும், எதிராக 197 வாக்குகளும் கிடைத்தன.


இந்த நாடாளுமன்ற அமர்வின்போது, அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் 'நேஷனல் கார்டு ட்ரூப்ஸ்' (National Guard Troops) என்ற தேசிய பாதுகாப்புத் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல மணி நேர விவாதங்களுக்குப் பிறகு இந்த கண்டனத் தீர்மானம நிறைவேற்றப்பட்டது.


Also Read | அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; என்ன காரணம் தெரியுமா?


அமெரிக்க வரலாற்றிலேயே தமக்கு எதிராக இரண்டாவது முறை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் முதல் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) தான். இதுவரை மூன்று அதிபர்களுக்கு எதிராகத்தான் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரிச்சர்ட் நிக்சன் (Richard Nixon), ஆண்ட்ரூ ஜான்சன் (Andrew Johnson) மற்றும் பில் கிளிண்டன் (Bill Clinton) என மூன்று அதிபர்கள் கண்டன தீர்மானங்களை எதிர்கொண்டனர். 


ஆனால் பதவி விலகுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இரண்டாவது முறை கண்டனங்களை எதிர்கொண்ட அமெரிக்காவின் முதல் அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமே.


அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ள நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு மேலவையான செனட்  (Senate) அவையில் விசாரணை நடக்கும். அங்கும் அந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டால், இனிமேல் எப்போதுமே அமெரிக்க  அதிபர் பதவிக்கு டொனால்ட் டிரம்ப் வருவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் மூடப்படும்.  


அமெரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தபோது, அதை தடை செய்ய்யும் வகையில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட கலவரக் காரரர்கள் 200 ஆண்டு அமெரிக்க வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒரு மோசமான பதிவை ஏற்படுத்தினார்கள். 


Also Read | டிரம்ப் ஆதரவாளர்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் வன்முறையை பரப்பக் கூடும்: FBI


கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபரான டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (Joe Biden) வெற்றி பெற்று, இன்னும் சில நாட்களில் அமெரிக்க அதிபராக பதவியேற்கவிருக்கிறார்.


ஜனவரி 20ம் தேதியன்று டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக செனட் மீண்டும் கூடாது என்பதால், டிரம்ப் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள்  குறைவு. ஆனால், 200 ஆண்டுகாலத்தில் நடைபெறாத வன்முறைகளை முதன்முதலில் பார்த்த கேபிடல் கட்டடம், வேறு முன்னெப்போதும் நடைபெறாத நிகழ்வுகளையும் எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளை நூறு சதவீத்ம் நிராகரித்துவிட முடியாது.


அடுத்த வாரம் ஜோ பைடன் அதிபராகப் பதவி ஏற்பதற்கு முன்பாக, தலைநகர் வாஷிங்டன் டிசியிலும், 50 மாநிலத் தலைநரங்களிலும் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. (FBI)எச்சரித்துள்ளது.


ALSO READ | அமெரிக்கா தான் எங்கள் முதல் எதிரி.. மிரட்டுகிறார் Kim Jong Un..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR