கராச்சி மேம்பாட்டு திட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு 722 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிதி உதவி மூல்ம பாகிஸ்தானின் கராச்சியில் குடிமை மற்றும் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த அந்நாடு திட்டமிட்டு இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


அங்கீகரிக்கப்பட்ட தொகையில், 652 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கராச்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் எனவும், மீதமுள்ள 70 மில்லியன் டாலர் நாட்டின் வடமேற்கு கைபர்-பக்துன்க்வா பிராந்தியத்தில் சுற்றுலா சேவைகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது உலக வங்கியின் இயக்குநர்கள் குழு வியாழக்கிழமை பாகிஸ்தானின் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கராச்சியில் உள்ள திட்டங்கள் நகர்ப்புற மேலாண்மை, பொது போக்குவரத்து, பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அதன் வாழ்வாதாரத்தையும் போட்டித்தன்மையையும் மேம்படுத்தும் என்று உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கராச்சி உருமாறும் வியூகத்தின் கண்டுபிடிப்புகளின் வெளிச்சத்தில் இந்த திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இது நகரத்தின் வளர்ச்சிக்கு அடுத்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்கு 9-10 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது.


மிகப்பெரிய நிதி தேவைகளுடன் ஒப்பிடுகையில், இந்த தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான ஆதாரங்களை கராச்சி உருவாக்கவில்லை என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது.