வட கொரியா செவ்வாய்கிழமை தனது கிழக்கு கடல் பகுதியில்,  மீண்டும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை  சோதித்துள்ளது எனவும், இந்த வாரத்தில் அதன் இரண்டாவது சோதனை எனவும் தென் கொரியா மற்றும் ஜப்பான் ராணுவங்கள் கூறுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த காலங்களில், வட கொரியா 2021 ஆம் ஆண்டில் அடிக்கடி ஆயுத சோதனைகளை நடத்தியது. இது உலகளாவிய தொற்றுநோய் மற்றும் அமெரிக்காவுடனான அணுசக்தி அமைதி பேச்சுவார்த்தைகளை நிறுத்திய நிலையில், லாக்டவுன் சமயத்தில் வட கொரியா (North Korea) தனது இராணுவ திறன்களை மேம்பாடுத்தும் முயற்சியில் இறங்கியது.


தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் கூறுகையில், வடகொரியா தனது கிழக்குக் கடல் பகுதியில் உள்நாட்டுப் பகுதியில் இருந்து ஒற்றை ஏவுகணையை ஏவியது என்றும் தென் கொரிய மற்றும் அமெரிக்க படைகள் ஏவுகணையை ஆய்வு செய்து வருகின்றன என்கின்றனர். ஏவுகணை எவ்வளவு தூரம் விழுந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஜப்பானின் பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இந்த ஆயுதம் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று கூறியது.


ALSO READ | நியூயார்க்கில் 30 ஆண்டுகளில் மோசமான தீ விபத்து; 9 குழந்தைகள் உட்பட 19 பேர் பலி


ஜப்பானைச் சுற்றியுள்ள கப்பல்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் சோதித்து வருவதாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறினார். எந்த இடையூறு அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. "வட கொரியா தொடர்ந்து ஏவுகணைகளை வீசுவது மிகவும் வருந்தத்தக்கது" என்று கிஷிடா கூறினார், வட கொரியாவின் முதல் ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதித்த சிறிது நேரத்திலேயே மீண்டும் சோதனையை நடத்தியுள்ளது. 


ALSO READ | வட கொரியாவில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் அதிகாரிகள்: காரணம் என்ன?


குவாம் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் குடிமைத் தற்காப்பு அலுவலகங்கள் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது பற்றிய அறிக்கைகளை ஆராய்ந்து வருவதாகக் கூறியது. ஆனால் பசிபிக் பகுதியில் உள்ள முக்கிய அமெரிக்க (America) இராணுவத் தளமான குவாமுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. முன்னதாக, வடகொரியா ஆறு நாட்களுக்கு முன்பு கிழக்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஏவுகணையை சோதனை பரிசோதனையை மேற்கொண்டது.


ALSO READ | Missile: வட கொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை ஏற்படுத்தும் போர் அபாயம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR