இந்திய வம்சாவளி நபரிடம் அடிபணிந்த எலான் மஸ்க்.. $10,000 கொடுக்க ஒப்புதல்!
உலகின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரரும், டெஸ்லா, ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க சீக்கிய இளைஞர் முன் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரரும், டெஸ்லா (Tesla), ட்விட்டர் (Twitter), ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க சீக்கிய இளைஞர் முன் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அமெரிக்க சீக்கிய விமர்சகரும், சுயேச்சை ஆய்வாளருமான ரந்தீப் ஹோதி, மஸ்க் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மஸ்க் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக அவர் குற்றம் சாட்டினார். டெஸ்லா ஊழியர்யர் ஒருவரை துன்புறுத்தியதாகவும், அவரை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாகவும், மஸ்க், ரந்தீப் ஹோதி மீது குற்றம் சாட்டினார். இந்நிலையில், இதனை எதிர்த்து ஹோதி 2020 ஆம் ஆண்டில் மஸ்க் மீது வழக்குப் பதிவு செய்தார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு மார்ச் மாதம், மஸ்க், ஹோதியிடம் வழக்கை வாபஸ் பெரும்படி கேட்டுக் கொண்டார். வழக்கைத் தீர்ப்பதற்கு $10,000 கொடுக்கவும் மஸ்க் ஒப்புக்கொண்டார்.
ஹோதி மீது டெஸ்லா குற்றச் சாட்டு
மஸ்க்கின் செட்டில்மென்ட் வாய்ப்பை தான் ஏற்றுக்கொண்டதாக ஹோதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர், 'இந்த வழக்கு ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்காக இருந்தது. இது பணம் அல்லது புகழ் பெறுவது அல்ல. இது நான் சொன்னது சரி என்பதை நிரூபித்துள்ளது. ஹோதி @skabooshka என்ற பெயரில் ட்விட்டர் கணக்கை வைத்துள்ளார். அங்கு அவர் எலோன் மஸ்க் மற்றும் அவரது நிறுவனத்தின் கூற்றுக்களை உண்மை தன்மையை பரிசோதித்து பதிவிட்டு வந்தார். இதில், ஆட்டோமேஷன், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி குறித்த நிறுவனத்தின் கூற்றுகள் அம்பலமானது. ஏப்ரல் 2019 இல், டெஸ்லா தொழிற்சாலை வாகன நிறுத்துமிடத்தில் ஹோதி ஒரு ஊழியர் மீது காரை ஏற்றியதாக டெஸ்லா குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை ஹோதி மறுத்தார்.
மேலும் படிக்க | பற்றி எரியும் மணிப்பூரைக் காப்பாற்றுங்கள்! பிரதமருக்கு கோரிக்கை
யார் அந்த ரந்தீப் ஹோதி
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆசிய மொழிகள் மற்றும் கலாச்சாரங்களில் முனைவர் பட்டம் பெறும் ரந்தீப் ஹோதி, டெஸ்லா நிறுவனத்தை விமர்சிப்பவர். டெஸ்லா உலகின் மிகப்பெரிய மின்சார கார் தயாரிப்பாளராகவும், சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகவும் உள்ளது. ஹோதி 2009 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். டெஸ்லா கார் ஆலையை வைத்திருக்கும் ஃப்ரீமாண்டில் அவரது பெற்றோர் வசிக்கின்றனர். எலோன் மஸ்க் மற்றும் டெஸ்லாவை விமர்சிக்கும் உலகளாவிய குழுவின் உறுப்பினராக ஹோதி உள்ளார். குழுவில் முன்னாள் டெஸ்லா ஊழியர்கள், ஹோதி போன்ற மாணவர்கள் மற்றும் பிற நிபுணர்கள் உள்ளனர். இந்தக் குழுவின் ஹேஷ்டேக் $TSLAQ ஆகும்.
மேலும் படிக்க | இணைய பயன்பாட்டில் பிற நகரங்களையும் உலகையும் பின்னுக்குத் தள்ளும் இந்திய கிராமங்கள்
இந்த குழுவில் உள்ளவர்கள் வெவ்வேறு பெயர்களில் ட்வீட் செய்து வருகின்றனர். ஹோதி @skabooshka என்ற கணக்கில் ட்வீட் செய்தார், ஆனால் 2018 இல் அவரது மற்றும் அவரது சகோதரரின் அடையாளம் வெளிவந்தது. அவரது சகோதரர் டெஸ்லாவின் போட்டியாளரான வோக்ஸ்வாகனில் பணிபுரிந்தார். ஆனால் இப்போது அவர் நிறுவனத்துடன் தொடர்பில் இல்லை. 2019 ஆம் ஆண்டில், வோக்ஸ்வாகனுடனான ஹோதியின் சகோதரரின் தொடர்பைப் பற்றி மஸ்க் ட்வீட் செய்தார். இதற்குப் பிறகு, ஹோதி 20 ஏப்ரல் 2019 அன்று ட்வீட் செய்து, 'இது எனது சபதம். டெஸ்லா ஜீரோ. ஆலன் மஸ்க் சிறைக்கு செல்வார்’ என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பி.டி உஷா! முதலில் நான் ஒரு வீராங்கனை பிறகே நிர்வாகி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ