வடகொரியா அதிபரை சந்திக்க தயார்: டொனால்டு டிரம்ப்
வடகொரியாவிற்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் இறங்கியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென அந்நாட்டு அதிபரை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளதார்.
ஐக்கியநாட்டு சபை தீர்மானங்கள் உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அந்நாடு மீது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அமெரிக்கா வந்தால் உகந்த சூழலில் அவரை சந்திக்க தயார் என டொனால்டு டிரம்ப் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வடகொரியா அதிபரை சந்திக்க டிரம்ப் விருப்பம் காட்டினாலும் அதற்கான காலம் கனியவில்லை என்று வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அணுகுண்டு சோதனைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா பகிரங்க மிரட்டல் விடுத்தது. ஏற்கனவே யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற விமானம் தாங்கி கப்பலை கொரிய கடற்பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.