வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் குழு ஒன்று, நியோகோவி (NeoCoV) என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பற்றி தெரிவித்துள்ளது. இந்த தொற்று வகை, அதிக இறப்பு மற்றும் தொற்று விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் அந்த குழு எச்சரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்புட்னிக் அறிக்கையின்படி, நியோகோவ் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் (South Africa) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறியான MERS-COV உடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.


NeoCoV முதலில் தென்னாப்பிரிக்காவில் வௌவால்களில் கண்டறியப்பட்டது. பின்னர் அது விலங்குகளிடையே பரவியது என்று ஸ்புட்னிக் அறிக்கை கூறுகிறது. ஒரு பிறழ்வு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று சமீபத்தில் ஒரு புதிய ஆய்வு கூறியுள்ளது.


NeoCoV மற்றும் அதன் நெருங்கிய வகையான PDF-2180-CoV ஆகியவை உடலில் நுழைவதற்கு சில வகையான பேட் Angiotensin-converting enzyme2 (ACE2) மற்றும் மனித ACE2 ஆகியவற்றைப் பயன்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு பிறழ்வு வைரஸ் மனித உயிரணுக்களுக்கு பரவுவதற்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.


ALSO READ | Twindemic: ஒமிக்ரானுக்கு மத்தியில் ட்விண்டமிக் அச்சுறுத்தலும் வந்தால் என்ன செய்வது? 


சீன அறிவியல் அகாடமியின் வுஹான் பல்கலைக்கழகம் மற்றும் பயோபிசிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இந்த வெளிப்பாட்டை செய்துள்ளார். புதிய ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


வுஹான் விஞ்ஞானிகள் NeoCoV MERS-CoV-ல் உயிர் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என்றும் (சராசரியாக பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் இறக்க நேரிடலாம்) தற்போதைய SARS-CoV-2 கொரோனா வைரஸை விட அதிக பரிமாற்ற வீதம் இருக்கும் என்றும் கூறியுள்ளதாக ஸ்புட்னிக் கூறியுள்ளது. 


புதிய ஆய்வின் கண்டுபிடிப்புகளுக்கு பதிலளித்த வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜிக்கான வெக்டர் ரஷ்ய மாநில ஆராய்ச்சி மையத்தின் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள், NeoCoV கொரோனா வைரஸ் குறித்த சீனா செய்யும் ஆராய்ச்சியைப் பற்றி தங்களுக்குத் தெரியும் என்றனர். 


எனினும், இந்த தரவு, மனிதர்களிடையே பரவக்கூடிய ஒரு புதிய கொரோனா வைரஸின் (Coronavirus) முழு தோற்றத்தை வெளிப்படுத்தவில்லை என்றும், இது தொடர்பாக ஆழமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். 


ALSO READ | தொற்று எண்ணிக்கையில் ஏற்றம், கட்டுப்பாடுகளில் தளர்வு: நெதர்லாந்தின் வினோத முடிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR