ஏமன் நாட்டின் ஏடன் நகரில், ராணுவ முகாமை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ முகாமை நோக்கி பயங்கரவாதி அதிவேகமாக காரை ஓட்டிவந்து வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த சம்பவத்தில் 60 பேர் பலியானார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. சம்பவ மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


ஏமனில், கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் உள்நாட்டு போரில் இதுவரை சுமார், 6,600 பொது மக்கள் பலியாகியுள்ளனர். சுமார் 80 சதவீத மக்கள் மனிதாபிமான உதவி தேடி அகதிகளாக பல நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர் என்று ஐ.நா., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.