தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட ஸ்ரீ ரெட்டி

பவன் கல்யாணை அண்ணா என்று அழைப்பதற்கு வெட்க படுகிறேன் என கூறியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Apr 17, 2018, 03:02 PM IST
தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட ஸ்ரீ ரெட்டி
Pic Courtesy : Twitter

தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில், நடிகைகள் தங்கள் கர்ப்பினை விலையாக கொடுக்க வேண்டியுள்ளது எனக் கூறிய ஸ்ரீ ரெட்டி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பட்டியலை வெளியிடுவேன் எனக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். 

இதனையடுத்து, பாகுபலி புகழ் நடிகர் ராணாவின் தம்பி அபிராம், தன்னுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீ ரெட்டி. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அடுத்ததாக, பிரபல எழுத்தாளர் கோனா வெங்கட் என்பவர் பிரபல இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறி என்னை கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

அந்தரங்க லீலையை லீக்ஸ் செய்த ஸ்ரீ ரெட்டி: சர்ச்சையில் சிக்கிய பல பிரபலங்கள்!

இவரின் குற்றசாட்டு தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவருக்கு ஆதராவாக பல முன்னணி நடிகைகள் களத்தில் இறங்கி உள்ளனர். 

தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. சினிமா வாய்ப்பு கேட்டு வந்தால், முதலில் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதற்கு உடன்படும் பெண்களையும், தங்கள் இச்சைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். இன்னும் பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட உள்ளோம். 

இந்த பிரச்சனையில் முதல்வர்கள் தலையிட்டு தீர்க்கவேண்டும் என ஸ்ரீ ரெட்டி உட்பட பல முன்னணி நடிகைகள் கூறியுள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய, இச்சம்பவத்தை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண் கூறியது, 

நடிகை ஸ்ரீ ரெட்டி தொலைக்காட்சிகளை நம்பாமல், நீதிமன்றத்தை நம்ப வேண்டும். நீதிமன்றம் தான் நீதி வழங்கும். மேலும் தொலைக்காட்சிகள் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது எனக் கூறியிருந்தார்.

எழுத்தாளர் தான் என்னை கெஸ்ட் ஹவுசிற்கு அழைத்தார்: ஸ்ரீ ரெட்டி!!

பவன் கல்யாண் கருத்து கண்டனம் தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி, தன்னையே செருப்பால் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close