ஸ்டீவன் ஸ்மிம், வார்னர் தண்டனை காலம் குறைக்கப்படுமா?

ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் தண்டனை காலத்தினை குறைக்குமாறு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கோரிக்கை!

Last Updated : Apr 3, 2018, 01:50 PM IST
ஸ்டீவன் ஸ்மிம், வார்னர் தண்டனை காலம் குறைக்கப்படுமா? title=

ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் தண்டனை காலத்தினை குறைக்குமாறு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கோரிக்கை!

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் தண்டனை காலத்தினை குறைக்குமாறு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆட்டத்தின் போது பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்து பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்த புகாரினை விசாரித்த ICC ஆஸ்திரேலியா அணி கேப்டன்  ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டிக் கட்டணத்தில் 100% அபராதத்தையும், கேமரான் பேங்கிராப்ட்போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதித்தது ஐசிசி.

பின்னர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஓராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவிப்பை அடுத்து, ஐபிஎல் தொடரிலும் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு இடம் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் தண்டனை காலத்தினை குறைக்குமாறு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

Trending News