மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைவாசம் மேலும் 10 ஆயிரம் அபராதம் விதிப்பு.
Actor Salman Khan sent to jail for 5 years in #BlackBuckPoachingCase, a penalty of Rs 10,000 also levied on him. pic.twitter.com/ZgXbXBnvx4
— ANI (@ANI) April 5, 2018
மான் வேட்டை வழக்கில் ராஜஸ்தான் மேல் முறையீட்டினை தொடர்ந்து, 20 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் மான்வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என கோர்ட் அறிவித்து உள்ளது.
Jodhpur court convicts Salman Khan, acquits rest in 1998 blackbuck poaching case pic.twitter.com/bUgSa7zaIM
— ANI (@ANI) April 5, 2018
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் 1998-ம் ஆண்டு இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் தனது படப்பிடிப்பில் இருந்தார். அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த ராஜஸ்தான் ஐகோர்ட், சல்மான் கான் மான் வேட்டை ஆடியதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
அதை தொடர்ந்து, இவ்வழக்கில் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, ராஜஸ்தான் அரசு ஜோத்பூர் ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. ராஜஸ்தான் மேல் முறையீட்டினை தொடர்ந்து, நேற்று சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்நிலையில் மான் வேட்டை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பளித்தார். நடிகர் சயீப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.