மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் ஜாலி!! புதிய டிஏ கணக்கீடு, அதிரடி ஊதிய உயர்வு

7th Pay Commission, DA Hike Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீடு மாறும் என கூறப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 15, 2024, 10:51 AM IST
  • இந்த முறை அகவிலைப்படி கணக்கீட்டில் மாற்றம் இருக்கும்.
  • இதற்கான காரணம் என்ன?
  • இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் ஜாலி!! புதிய டிஏ கணக்கீடு, அதிரடி ஊதிய உயர்வு title=

7th Pay Commission, DA Hike Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீடு மாறும் என கூறப்படுகின்றது. தற்போது ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. இது ஜனவரி 2024 முதல் அமலில் உள்ளது. அடுத்ததாக அகவிலைப்படி ஜூலை 2024 -இல் அதிகரிக்கப்படும். ஆனால்,  இந்த முறை அகவிலைப்படி கணக்கீட்டில் மாற்றம் இருக்கும். இதற்கான காரணம் என்ன? இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். 

அகவிலைப்படி பூஜ்ஜியம் முதல் தொடங்கும்

ஒரு ஆண்டில் இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees)அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி திருத்தம் கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீடுகளின் (AICPI Index) அடிப்படையிலும், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு (DA Hike) ஜனவரி முதல் ஜூலை மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகின்றது. 

தற்போது ஜனவரி 2024க்கான தரவு மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, அகவிலைப்படி 50% -ஐ எட்டியவுடன் அது 0 ஆக்கப்பட்டு மொத்த அகவிலைப்படித் தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். அதன் பிறகு அகவிலைப்படி கணக்கீடு மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும். அதன் பின்னர் ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் படி, அகவிலைப்படி உயர்வு 1%, 2% என கணக்கிடப்படும். கணக்கீடு மாறுவது உறுதி என தொழிலாளர் பணியக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதற்கான உறுதியான அறிவிப்பு எதிவும் இன்னும் வெளியிடப்படவில்லை. 

அகவிலைப்படி AICPI எண்களால் தீர்மானிக்கப்படுகிறது

7வது ஊதியக் குழுவின் படி, மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீடு அதாவது சிபிஐ (ஐடபிள்யூ) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் இந்த தரவை வெளியிடுகிறது. இருப்பினும், இப்போது இந்த தரவு ஒரு மாத தாமதத்தில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஜனவரி மாதத்திற்கான தரவு பிப்ரவரி இறுதியில் வரும். அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதை குறியீட்டு எண்கள் தீர்மானிக்கின்றன.

மேலும் படிக்க | Health Insurance: மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!

 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை நிர்ணயம் செய்வதற்கான சூத்திரம்:

- [(Average of All India Consumer Price Index (AICPI) of last 12 months – 115.76)/115.76]×100

தொழிலாளர் பணியகம் 2 மாதங்களாக தரவுகளை வெளியிடவில்லை

தொழில்துறை தொழிலாளர்களுக்கான CPI கணக்கீட்டிற்கு, ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் AICPI எண் வெளியிடப்படும். இதற்கான நிகழ்வு காலண்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்திற்கான சிபிஐ எண் பிப்ரவரி 29 அன்று வெளியிடப்பட்டது. பிப்ரவரி மாதத்திற்கான சிபிஐ எண் மார்ச் 28ம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஆனால், அது வெளியிடப்படவில்லை. அதேபோல், மார்ச் எண்களும் ஏப்ரல் 30 அன்று வெளியிடப்படவில்லை. தொழிலாளர் பணியகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான எண்கள் இல்லை என்றும் அதனால் மேற்கொண்டு கணக்கீடுகள் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஆறு மாதங்களில் பணவீக்க அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதை இந்த எண்ணிக்கையே தீர்மானிக்கும்.

ஊழியர்களுக்கான நல்ல செய்தி என்ன? 

அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஜூலையில் இறுதி எண்கள் வரும்போதுதான், அகவிலைப்படி (Dearness Allowance) பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுமா அல்லது 50% -க்கு மேல் கணக்கீடு தொடருமா என்பது தெளிவாகத் தெரியும். அகவிலைப்படி எப்படி, எங்கிருந்து கணக்கிடப்படும் என்பது அரசாங்கத்தைப் பொறுத்தது. ஆனால், அகவிலைப்படி பூஜ்ஜியமாக மாற்றப்பட்டால், 50% அகவிலைப்படித் தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். இதுஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாக இருக்கும்.

குறைந்தபட்ச சம்பளம் 9000 ரூபாய் உயரும்

அகவிலைப்படி கணக்கீடு ஜூலை முதல் 0 முதல் தொடங்கினால், மத்திய ஊழியர்களின் சம்பளம் குறைந்தபட்சம் ரூ.9000 அதிகரிக்கும். இந்த உயர்வு குறைந்தபட்ச சம்பளத்தில் கணக்கிடப்படும். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 

- ஒரு மத்திய ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18000 என்றால், அவருடைய சம்பளத்தில் ரூ.9000 சேர்க்கப்பட்டு, சம்பளம் ரூ.27000 ஆக உயரும்.

- அதேபோல் ஒரு ஊழியரின் சம்பளம் ரூ.25000 என்றால் அவருடைய சம்பளத்தில் ரூ.12500 அதிகரிக்கும். 

- அதாவது பூஜ்ஜியமாக்கப்படும் 50% அகவிலைப்படியின் தொகை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். 

கடைசியாக 2016 ஜனவரி 1 அன்று அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. அப்போது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க |  EPFO உறுப்பினர்களுக்கு நற்செய்தி: கல்வி, திருமணம், ஹவுசிங் ஆகியவற்றுக்கு Auto Claim வசதி அறிமுகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News