போஸ்ட் ஆபீஸ் RD... HDFC RD... எஸ்பிஐ RD... எது பெஸ்ட்..!!

Post Office Vs HDFC Vs SBI RD: தொடர் வைப்புத்தொகை (RD) எப்போதும் பணத்தைச் சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் மிகவும் விருப்பமான மற்றும் பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 22, 2023, 11:32 AM IST
  • வங்கியில் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உங்கள் முதலீட்டை ரூ.1000 மூலம் தொடங்கலாம்.
  • வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • RD திட்டத்தின் வட்டி விகிதத்தை மத்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது.
போஸ்ட் ஆபீஸ் RD... HDFC RD... எஸ்பிஐ RD... எது பெஸ்ட்..!! title=

நீண்ட காலத்திற்குச் சேமிப்பதற்கான ஈஸியான வழியை நீங்கள் தேடுகிறீர்களானால், தொடர்ச்சியான வைப்புத் தொகையில் (Recurring Deposit) முதலீடு செய்வது பலருக்கு விருப்பமான முதலீட்டு முறையாக உள்ளது . RD என்று பொதுவாக அழைக்கப்படும் இதில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு தவணைகள் என உங்களுக்கு வசதியான முறையின் மூலம் பணத்தை முதலீடு செய்யலாம். இதற்கு அதிக வட்டியும் கிடைப்பதால், பணத்தை பாதுகாப்பாக பெருக்க இது மிகவும் பாதுகாப்பானது.  தொடர் வைப்புத்தொகை (RD) எப்போதும் பணத்தைச் சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் மிகவும் விருப்பமான மற்றும் பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

வெவ்வேறு வங்கிகளின் RD திட்டங்களில் சேமிப்பதற்காக உங்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம் என்னும் நிலையில், இதன் மீதான நல்ல வட்டி விகிதங்களின் பலனும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, தபால் நிலையத்தின் RD திட்டத்திலும் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முதலில் தபால் அலுவலக RD அல்லது வங்கி RD, நீங்கள் அதிகபட்ச வட்டி பலனைப் பெறுகிறீர்களா என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இங்கே நாம் பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி மற்றும் தபால் அலுவலகத்தின் RD முதலீட்டில் கிடைக்கும் வட்டியை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வட்டி விகிதம்

டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டிற்கான 5 ஆண்டு RD திட்டத்தின் வட்டி விகிதத்தை மத்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது. அதன் பிறகு இப்போது வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 6.5 சதவீதத்திற்குப் பதிலாக 6.7 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். இந்த வட்டி விகிதம் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் HDFC வங்கி ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். எஸ்பிஐ 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் ஆர்டிகளுக்கு 5.75 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது, எச்டிஎஃப்சி வங்கி ஆர்டிகளுக்கு 4.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

மேலும் படிக்க | Business Idea:ரூ.10,000 இருந்தால் போதும்... முதல் நாளில் இருந்தே வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும்!

தபால் அலுவலகம் RD

அஞ்சலக துறையின் இந்தியா போஸ்ட் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, 5 வருட RD கணக்கைத் திறந்த பிறகு, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 100 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். புதுப்பிக்கப்பட்ட தகவலின்படி, வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கி (SBI)

பாரத ஸ்டேட் வங்கி (SBI) அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 6.50 சதவிகிதம் முதல் 6.80 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதங்களை RD கணக்கு முதலீட்டில் வழங்குகிறது. மூத்த குடிமக்கள் பிரிவின் கீழ் வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 7 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. 100 ரூபாய் முதல் 1 வருடம் முதல் 10 ஆண்டுகள் வரை வங்கியில் உங்கள் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

HDFC வங்கி

HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு RD கணக்கு முதலீடுகளுக்கு  4.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டியின் பலனை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் பிரிவில் வரும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் 5 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை இருக்கும். இந்த வங்கியில் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உங்கள் முதலீட்டை ரூ.1000 மூலம் தொடங்கலாம்.

மேலும் படிக்க | Business Idea: குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் கொடுக்கும் டாப் ‘10’ பிஸினஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News