ரூ. 4000 மாத ஓய்வூதியம் வாங்க ரெடியா? பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கிடைக்கும்!

Abhaya Hastam Pension: ஏழைகளுக்கு 4000 ஓய்வூதியம் விரைவில் தெலுங்கானாவில் அமல்படுத்த காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 28, 2023, 05:17 PM IST
  • தெலங்கானாவில் ஏழைகளுக்கு ஓய்வூதியத் திட்டம்
  • காங்கிரஸின் நிறுவக நாளில் பென்சன் திட்டம்
  • அபய ஹஸ்தம் திட்டம் தொடங்கியது
ரூ. 4000 மாத ஓய்வூதியம் வாங்க ரெடியா? பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கிடைக்கும்!  title=

4000 ரூபாய் மாத ஓய்வூதியம்: தெலுங்கானா முதல்வர் ஏ ரேவந்த் ரெட்டி, தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளின்படி ஆறு உத்தரவாதங்களை நிறைவேற்றும் திட்டமான “அபய ஹஸ்தம்” திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் பதவியேற்ற 100 நாட்களுக்குள் நிறைவேற்ற தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார். 

தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள மாநிலச் செயலகத்தில் 'அபய ஹஸ்தம்’ (Abhaya Hastham) என்ற விண்ணப்பப் படிவம் தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநில அரசு, இன்று (வியாழன், டிசம்பர் 28) முதல் ஒரு வார காலத்திற்கு மேற்கொள்கிறது.

தெலுங்கானாவில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இன்று முதல் ஜனவரி 6ம் தேதி வரை முக்கிய சேவைகள் தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்யும் முகாம்களுக்கு மாநில அரசு மேற்கொண்டுள்ளது. 1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ம் நாளான்று காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டது. இன்று காங்கிரஸ் கட்சியின் நிறுவக நாளை முன்னிட்டு, தெலங்கானா மாநில அரசு மக்களின் நலனுக்காக இந்தத் திட்டத்தை தொடங்கியிருக்கிறது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி? 8வது சம்பள கமிஷன்..முக்கிய அப்டேட்

இன்று முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று, மாநிலத்திலுள்ள ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் செய்யப்படும். காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள்.  

தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றும் பல்வேறு திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறும் கால அவகாசம் ஜனவரி 6 ஆம் தேதி முடிவடைகிறது.

மாநிலத்தின் துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா மற்றும் பிற மூத்த அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து "பிரஜா பலனா" பயன்பாடுகளின் வடிவம், திட்டத்தின் சின்னம் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தங்கள் நோக்கமே, மக்களுக்கான சேவைகளை அவர்களின வீட்டு வாசலுக்கேக் கொண்டு செல்வதுதான் என்றார். "மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க அரசாங்கத்திற்கு செல்வதற்கு பதிலாக, அரசாங்கமே மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும்," என்று அவர் கூறினார்.
 
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் வார்டுகளில் மக்களிடம் இருந்து குறைகள் மற்றும் விண்ணப்பங்களைப் பெறும்.விண்ணப்பங்களை சேகரிக்க அனைத்து கிராமங்களிலும் கவுண்டர்கள் இருக்கும். பெண்களுக்கு தனி கவுன்டர்கள் அமைக்கப்படும். 

மேலும் படிக்க | நீங்கள் இதை செய்திருந்தால் வருமான வரி நோட்டீஸ் வரும்: உடனே செக் செய்யுங்கள்

அரசின் திட்டங்களுக்கான விண்ணப்பங்களைத் தவிர, மக்கள் குறைகளைச் சமர்ப்பிக்க தனி கவுன்டர்கள் இருக்கும். “ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான திட்டங்கள் என்றாலும், ரேஷன் கார்டு இல்லாதவர்களும் புதிய ரேஷன் அட்டைக்காக விண்ணப்பிக்கலாம்” என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, பல்வேறு திட்டங்களின் கீழ் எவ்வளவு பயனாளிகள் எவ்வளவு பயனடைவார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதே முழுப் பயிற்சி என்று முதலமைச்சர் தெரிவித்தார். 

ஜோதிபா பூலே பிரஜா பவனில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வரும் பிரஜா வாணி நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த அவர், இதுவரை 24,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு வருவதாக கூறினார்.

முதல்வர் ரேவந்த் ரெட்டி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மகாத்மா ஜோதிபா பூலே பிரஜா பவனில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து 'பிரஜாவாணி' (Prajavani) எனப்படும் மக்களின் கோரிக்கைகளை கேட்கும் அமர்வுகளை ஏற்பாடு செய்து வருகிறார்.

மேலும் படிக்க | Praja Palana: ஏழை மக்களுக்கு வெள்ளை ரேஷன் கார்டு! தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News