LIC பாலிசிதாரர்களுக்கு எச்சரிக்கை: மார்ச் 31ம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்!

ஆதாருடன் பான் கார்டை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில் எல்ஐசி நிறுவனமும் தனது பாலிசிதாரர்களை பாலிசியுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 24, 2023, 01:25 PM IST
  • எல்ஐசி பாலிசி உடன் பான் கார்டை இணைக்காதவர்களுக்கும் மார்ச் 31 தான் கடைசி தேதியாகும்.
  • ரூ.50,000 மேல் பரிவர்த்தனைகளைச் செய்ய ஆதார்-பான் இணைப்பு அவசியம்.
  • பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்க கடைசி தேதி மார்ச் 31, 2023 ஆகும்.
LIC பாலிசிதாரர்களுக்கு எச்சரிக்கை: மார்ச் 31ம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்! title=

பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதேபோல பான் கார்டை எல்ஐசி பாலிசியுடன் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க கடைசி தேதி மார்ச் 31, 2023 ஆகும், இதை செய்யவில்லை என்றால் வருமான வரிக் கணக்கைச் செயல்படுத்த முடியாது.  மேலும் ரூ.50,000-க்கு மேல் வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்ய நீங்கள் திட்டமிட்டால், உங்கள் ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்க வேண்டியது அவசியம்.  வருமான வரித்துறையின் கூற்றுப்படி, மார்ச் 31, 2023-க்குள் உங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும் என்று கூறியுள்ளது.  தற்போது எல்ஐசி தனது அனைத்து பாலிசிதாரர்களுக்கும் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.  அதாவது பாலிசிதாரர்கள் தங்கள் பான் எண்ணை பாலிசியுடன் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.  எல்ஐசி பாலிசி உடன் பான் கார்டை இணைக்காதவர்களுக்கும் மார்ச் 31 தான் கடைசி தேதியாகும்.  இப்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக பாலிசியுடன், பான் கார்டை இணைப்பது எப்படி என்பதை பின்வருமாறு காண்போம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அந்த நாள்! வந்தது நல்ல செய்தி!

1) எல்ஐசியின் தளத்தில் பாலிசிகளின் பட்டியலுடன் பான் விவரங்களை கொடுக்க வேண்டும்.

2) உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டதும், எல்ஐசியில் இருந்து அந்த மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி-யை உள்ளிட வேண்டும்.

3) படிவத்தை சமர்ப்பித்த பிறகு, பதிவு கோரிக்கை வெற்றிகரமாக உள்ளது என்ற செய்தியைப் பெறுவீர்கள்.

4) இப்போது உங்கள் பான் எல்ஐசி பாலிசியுடன் இணைக்கப்படும்.

பான்-எல்ஐசி இணைப்பு நிலையைச் சரிபார்த்தல்:

- https://linkpan.licindia.in/UIDSedingWebApp/getPolicyPANStatus எனும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் இணைப்பை சரிபார்க்கலாம்.

- பாலிசி எண், பிறந்த தேதி மற்றும் பான் எண்ணை உள்ளிட வேண்டும்.

- பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யவேண்டும்.

- இப்போது எல்ஐசி பாலிசி மற்றும் பான் இணைப்பு நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.

எல்ஐசியை பான் உடன் இணைப்பதற்கான செயல்முறை:

- எல்ஐசி-ன் அதிகாரபூர்வ இணையதள பக்கமான https://licindia.in/ என்பதற்கு செல்ல வேண்டும்.

- இதன் முகப்புப் பக்கத்தில் உள்ள 'ஆன்லைன் பான் பதிவு' எனும் ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.

- ஆன்லைன் பான் பதிவு விண்டோவில் 'Proceed' எனும் ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.

- சரியான மின்னஞ்சல் ஐடி, பான், மொபைல் எண் மற்றும் எல்ஐசி பாலிசி எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

- இப்போது கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

- இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ஓடிபி-ஐக் கோர வேண்டும்.

- ஓடிபி கிடைத்த பிறகு போர்ட்டலில் மார்க்ஸை உள்ளிட்டு அதைச் சமர்ப்பிக்க வேண்டும்.

- விவரங்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டவுடன், பதிவுக் கோரிக்கை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் பக்கம் திரையில் தோன்றும்.

மேலும் படிக்க | 7th Pay Commission ஜாக்பாட்: அகவிலைப்படி அதிகரிப்பால் உயரும் ஊதியம், முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News