Old Pension குறித்து மிகப்பெரிய ஜாக்பாட் அப்டேட், நாடு முழுவதும் பொருந்தும்

Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நாடு முழுவதும் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 27, 2023, 11:27 AM IST
  • அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
  • அரசு தனது பங்களிப்பை 14 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
  • இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது.
Old Pension குறித்து மிகப்பெரிய ஜாக்பாட் அப்டேட், நாடு முழுவதும் பொருந்தும் title=

பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நாடு முழுவதும் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இதை அமல்படுத்துவது தொடர்பாக பல மாநிலங்களில் வேலைநிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன, ஆனால் தற்போது நிதியமைச்சர் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது. இந்த அறிவிப்பு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பானது. அவை என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்கும்
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்தியின் படி, இனி அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறலாம் ஆம், இனி புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்தாலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் பிரபலப்படுத்தும். இதிலும், உத்தரவாதமான வருமானத்துடன் சம்பாதிப்பதிலும் கவனம் செலுத்தப்படும்.

மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வெளியானது புதிய விதி!

நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது
நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர். இதனிடையே பல மாநிலங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசிடம் இதற்கான கோரிக்கை வலுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இது மத்திய அரசு மட்டத்தில் செயல்படுத்தப்படவில்லை, இருப்பினும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உத்தரவாதமான வருமானம் குறித்து நிதியமைச்சகம் ஆய்வு செய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்திலேயே ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தின் பலனைப் பெறும் திட்டம் தயாரித்து வருகிறது.

பல நன்மைகளைப் பெறலாம்
மத்திய அரசு ஊழியர்களும் கூடுதல் சலுகைகளைப் பெறும் வகையில், புதிய ஓய்வூதியத் திட்டத்திலும் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதிய முறையைக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதனுடன், அரசு தனது பங்களிப்பை 14 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அரசு கஜானா சுமையை ஏற்படுத்தாமல் பங்களிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

மேலும் படிக்க | மக்களே உசார்! மார்ச் 31-க்குள் நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News