ரூ. 2000 நோட்டு முக்கிய அறிவிப்பு... காலக்கெடுவை நீட்டிக்கிறதா ரிசர்வ் வங்கி?

2000 Rupee Note Exchange Deadline: இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் இறுதி வரை ரூ.2,000 கரன்சி நோட்டுகளை வங்கிகளில் திருப்பித் தருவதற்கு கால அவகாசம் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 29, 2023, 11:37 AM IST
  • 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30.
  • இதனை ரிசர்வ் வங்கி நீட்டிக்கக்கூடும்.
  • இது குறித்த சமீபத்திய அப்டேட்டை இங்கே காணலாம்.
ரூ. 2000 நோட்டு முக்கிய அறிவிப்பு... காலக்கெடுவை நீட்டிக்கிறதா ரிசர்வ் வங்கி?  title=

RBI on 2000 Rupee Note Exchange Deadline: மக்களுக்கு முக்கிய செய்தி!! 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் திருப்பித் தருவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 ஆம் தேதி என இருந்த நிலையில், தற்போது இது குறித்த ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அக்டோபர் இறுதி வரை ரூ.2,000 கரன்சி நோட்டுகளை வங்கிகளில் திருப்பித் தருவதற்கு கால அவகாசம் அளிக்க வாய்ப்புள்ளதாக, இந்த செயல்பாட்டுடன் தொடர்புடைய ஒரு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். எனினும், அவர் இந்த தகவலுக்கு பொறுப்பேற்க மறுத்துவிட்டார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

"ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்கும் தேதியை குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும் என்று தெரிகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும்  வெளிநாடுகளில் வசிக்கும் பிறரை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்று அந்த அதிகாரி கூறினார்.

ரூ. 2000 நோட்டு: திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு

2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என ரிசர்வ் வங்கி முதலில் நிர்ணயித்தது. 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.2,000 ரூபாய் நோட்டுகள், அதாவது புழக்கத்தில் உள்ள இந்த நாணயத் தாள்களில் 93 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக மத்திய வங்கி செப்டம்பர் 1 ஆம் தேதி தெரிவித்தது. ஆகஸ்ட் 31-ம் தேதி வர்த்தகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகள் ரூ.0.24 லட்சம் கோடியாக இருந்தது. 3.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள், அதாவது புழக்கத்தில் இருந்த 88 சதவிகிதம், ஜூலை 31-ம் தேதிக்குள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன.

முன்னதாக, மே 19 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank) ரூ. 2,000 கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தனது ‘க்ளீன் நோட் பாலிசி’-யின் ஒரு பகுதியாக இதை வங்கி குறிப்பிட்டது. வங்கிகள் இந்த நோட்டுகளை மக்களுக்கு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.

மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி: RBI ரெப்போ விகிதம் குறித்து வந்த பெரிய தகவல்... வட்டி விகிதங்களில் மாற்றம்?

ரிசர்வ் வங்கியின் 'Clean Note Policy'

இந்திய ரிசர்வ் வங்கியின் 'Clean Note Policy' கொள்கையின்படி, புழக்கத்தில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு பற்றி இன்னும் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. எனினும் இது குறித்து பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆர்பிஐ காலக்கெடுவை நீட்டிக்கும் என தனக்கு தோன்றுவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சந்தன் சின்ஹா கூறியுள்ளார். 

ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் கரன்சி நோட்டுகளை முடிந்தவரை 100 சதவிகிதம் திரும்பப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது எனவும், இதன் காரணமாக இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கலாம் எனவும் நிபுணர்கள் கருதுகிறார்கள். “இந்த காலக்கெடுவை தவறவிட்டவர்களுக்கு ரிசர்வ் வங்கி சிறப்பு சலுகையை அளிக்கக்கூடும். சிலர் வெளிநாட்டில் இருந்தனர், சிலருக்கு உடல்நிலை சரியில்லை, இப்படி பல காரணங்கள் உள்ளன. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படலாம்” என்று பிரபல வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்கிகளில் கூட்டம் காணப்படவில்லை

2,000 ரூபாய் நோட்டுகளை (2000 Rupee Notes) டெபாசிட் செய்வதற்கோ அல்லது மாற்றுவதற்கோ இதுவரை வங்கிகள் அவசரம் காட்டவில்லை. “டெபாசிட்/பரிமாற்றத்தின் தினசரி ஓட்ட விகிதம் மிகக் குறைவாக உள்ளது. செப்டம்பர் கடைசி வாரத்தில், தொகையில் அதிகரிப்பு இருக்கலாம்” என்று ஒரு பிரபல வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் கூறினார்.

2000 ரூபாய் நோட்டுகளுக்கான நோக்கம் நிறைவேறியதாலும், சிறிய மதிப்பிலான நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்ததாலும், 2018-19 -இல் ரூ. 2,000 நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

இருப்பினும், வைப்பு மற்றும் பரிமாற்றங்களில் உள்ள ரூ.2,000 நோட்டுகளில் ஒரு நல்ல பகுதி வணிகங்களில் இருந்து வந்ததே தவிர தனிப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து வரவில்லை என குறைந்தபட்சம் மூன்று வங்கிகளில் பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. 

2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டததைத் தொடர்ந்து, வங்கி அமைப்பில் அதிகப்படியான பணப்புழக்கத்தை அதிகரிக்க ஐசிஆர்ஆர் (ICRR - இன்கிரிமென்டல் கேஷ் ரிசர்வ் ரேஷியோ) ஐ ஆர்பிஐ அறிமுகப்படுத்தியது.

மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு முக்கிய செய்தி: வட்டி விகிதங்களை மாற்றுமா ரிசர்வ் வங்கி? முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News