ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: செப்டம்பர் 30-க்குள் இதை கண்டிப்பாக செய்து விடுங்கள்

RBI on Bank Lockers: லாக்கர் வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய செய்தியை வழங்கியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 23, 2023, 09:43 PM IST
  • இந்த வங்கிகளில் லாக்கர் உள்ளதா?
  • புதிய ஒப்பந்த விவரங்கள் என்ன?
  • இப்பணியை செப்டம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: செப்டம்பர் 30-க்குள் இதை கண்டிப்பாக செய்து விடுங்கள் title=

ரிசர்வ் வங்கி, சமீபத்திய புதுப்பிப்பு: வங்கிகளில் லாக்கர் வசதியை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. லாக்கர் வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய செய்தியை வழங்கியுள்ளது. வங்கி லாக்கர் வாடிக்கையாளர்களிடம் லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இப்பணியை கட்டாயம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்த வங்கிகளில் லாக்கர் உள்ளதா?

நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பாங்க் ஆஃப் பரோடா (BOB) அல்லது வேறு ஏதேனும் வங்கியில் லாக்கர் வைத்திருந்தால், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கி லாக்கர் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், நீங்கள் வங்கி லாக்கரை இழக்க வேண்டி வரலாம். 

அதன் வாடிக்கையாளர்களின் உரிமைகளை மனதில் கொண்டு, SBI மற்றும் BOB சில திருத்தங்களுடன் புதிய வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளன. இது குறித்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளன. இவற்றில் வாடிக்கையாளர்கள் கையொப்பமிடுவது அவசியம். கையொப்பமிட, வாடிக்கையாளர் தனது லாக்கர் இருக்கும் அதே வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டும்

இப்பணியை டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்

இப்பணியை டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில், வங்கிகள் ஜூன் 30ஆம் தேதிக்குள் 50 சதவீதம் பேரிடமும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 75 சதவீதம் பேரிடமும், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் 100 சதவீதம் பேரிடமும் கையொப்பம் பெற வேண்டும். ரிசர்வ் வங்கியின் போர்ட்டலில் லாக்கர் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து தகவல்களையும் புதுப்பிக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்த விவரங்கள் என்ன?

புதிய லாக்கர் ஒப்பந்தத்தின்படி, லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு வங்கிகள் பொறுப்பு இல்லை என்று இப்போது கூற முடியாது. திருட்டு, மோசடி, தீ அல்லது கட்டிடம் இடிந்து விழுந்தால் லாக்கருக்கு சேதம் ஏற்பட்டால் அவை தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. இந்த வழக்கில், லாக்கரின் வருடாந்திர வாடகையை விட 100 மடங்கு வரை வங்கி இழப்பீடு கொடுக்க வேண்டும். இது தவிர, லாக்கரின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | முக்கிய அறிவிப்பு விரைவில்: சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம்

வங்கிகள் கட்டணத்தை அதிகரித்தன:

மாற்றங்களுக்குப் பிறகு வங்கிகள் லாக்கர் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. எஸ்பிஐ பல்வேறு கிளைகளில் ரூ.1,500-12,000 வரையிலான டெபாசிட்களில் இருந்து ஜிஎஸ்டியை வசூலித்து வருகிறது. முன்னதாக இந்த தொகை ஆண்டுக்கு ரூ.500-3,000 ஆக இருந்தது. கட்டணங்கள் நகரங்கள் மற்றும் லாக்கரின் வகையைப் பொறுத்தது. ஹெச்டிஎஃப்சி வங்கி, இடம் மற்றும் வகையைப் பொறுத்து, லாக்கருக்கு ஆண்டுதோறும் ரூ.1,350 முதல் ரூ.20,000 வரை வசூலிக்கிறது.

கூடுதல் தகவல்:

வங்கிகளில் கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் கடனை திருப்பி செலுத்திவிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இவர்களுக்காக ஒரு புதிய வழிகாட்டுதலை அறிவித்துள்ளது. இது வங்கியில் கடன் வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வங்கிகள், என்பிஎஃப்சி (NBFC) -கள், ஹோம் பைனான்ஸ் அமைப்புகள், ஏஆர்சி (ARC) மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி சேவை அமைப்புகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

வங்கியில் கடன் பெற்று, முழு வங்கிக் கடனையும் திருப்பிச் செலுத்தியுள்ள வாடிக்கையாளர்களின் ஆவணங்களைத் திருப்பித் தர, வாடிக்கையாளர் கடன் வாங்கிய வங்கி அல்லது NBFC நிறுவனம் தயங்கினாலோ, தாமதித்தாலோ, வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, இப்போது கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆவணங்களுக்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி... டிஏ ஹைக், டிஏ அரியர் பற்றிய லேட்டஸ்ட் சூப்பர் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News