ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்.. 2 நாட்களுக்கு பிறகு இலவச ரேஷன் கிடைக்காது

Ration Card Update: இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ஆம் தேதியை மனதில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையெனில், இவர்களுக்கு இலவச ரேஷன் வசதி கிடைக்காது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 28, 2023, 09:38 PM IST
  • ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான இன்னும் 2 நாட்களே கால அவகாசம் உள்ளது.
  • ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மிகப் பெரிய அப்டேட் வெளியீடு.
  • ​ரேஷன் - ஆதார் இணைப்பது எப்படி?
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்.. 2 நாட்களுக்கு பிறகு இலவச ரேஷன் கிடைக்காது title=

ரேஷன் கார்டு தொடர்பாக வெளியான முக்கிய அப்டேட்: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில் நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், ஜூன் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான தேதியாகும். அதன்படி இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ஆம் தேதியை மனதில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையெனில், பின்னர் இலவச ரேஷன் வசதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இதற்கு நீங்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும்.

உணவுத் துறையினர் முக்கிய தகவல் அளித்தனர்
இந்த நிலையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கும் தேதி தற்போது நெருங்கி வருகிறது. இது தொடர்பாக அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைத்த பிறகு, உணவு தானியங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | SIP: வித்தியாசம் 5 ஆண்டுகள்தான், ஆனால் இரட்டிப்பு லாபம்: லாபத்தின் முழு கணக்கீடு இதோ

ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார் ஆட்டை - ரேஷன் கார்டை லிங்க் செய்வது கட்டாயமாகும்
முன்னதாக, ஆதாருடன் ரேஷன் இணைக்கும் தேதி மார்ச் 31 ஆக இருந்தது, பின்னர் இந்த தேதி ஜூன் 30 ஆக நீடிக்கப்பட்டது, அந்தவகையில் இனி உங்களுக்கு 30 ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளன. ரேஷன் கார்டை ஒரே நாடு-ஒரே ரேஷன் என அரசு அறிவித்ததில் இருந்தே, ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது குறித்து மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது.

ஆதார் ஆட்டை - ரேஷன் கார்டை எப்படி இணைப்பது?

>> பொது விநியோக அமைப்பின் இணையதளத்திற்குச் செல்லவும் (ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த PDS போர்டல் உள்ளது).
>> ரேஷன் அட்டையுடன் உங்கள் ஆதாரை இணைக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
>> அந்த வரிசையில் உங்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
>> 'continue/submit' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
>> உங்கள் போனில் OTP வரும். அதை உள்ளிடவும்.
>> செயல்முறை முடிந்ததும், உங்களுக்கு SMS அனுப்பப்படும்.

​ஆதார் ஆட்டை - ரேஷன் கார்டை நேரடியாக எப்படி இணைப்பது?
நேரடியாக சென்று ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க விரும்பினால், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைத்தால், அதன்பிறகு யாரும் நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக ரேஷன் வாங்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு, ரேஷன் வாங்குவதில் யார் தவறு செய்தாலும், அது முழுமையாக தடுக்கப்படும். இதன் மூலம் ஏழைகள் மட்டுமே மானியத்தில் உணவு தானியங்களை பெற முடியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உலகின் மிக விலையுயர்ந்த வீட்டை வாங்கும் இந்திய குபேரர்கள் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News