Indian Railways முக்கிய அப்டேட்: ரயில் தாமதமானால் ரீஃபண்ட் கிடைக்கும்..இதுதான் விதி

Indian Railways: ரயில் பயணிகளின் வசதிகளுக்காக இந்திய ரயில்வே பல விதிகளை இயற்றியுள்ளது. இவற்றை பற்றி அனைத்து பயணிகளும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2023, 03:55 PM IST
  • அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நபரா நீங்கள்?
  • அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
  • ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது.
Indian Railways முக்கிய அப்டேட்: ரயில் தாமதமானால் ரீஃபண்ட் கிடைக்கும்..இதுதான் விதி title=

Indian Railways Ticket Refund : அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நபரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  

ரயில் பயணிகளின் வசதிகளுக்காக இந்திய ரயில்வே பல விதிகளை இயற்றியுள்ளது. இவற்றை பற்றி அனைத்து பயணிகளும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பல சமயங்களில் பல்வேறு காரணங்களால் ரயில்கள் தாமதமாக இலக்கை அடைவதுண்டு. அல்லது புறப்படும் நேரத்திலேயே தாமதம் ஏற்படுவதுண்டு. ரயில் தாமதத்தால், அதன் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதனால் பலருக்கு பல முக்கிய பணிகளை செய்ய முடியாமல் போய் விடுகின்றது, சிலர் இணைப்பு ரயிலைத் தவற விடுகிறார்கள், பொதுவான காத்திருப்பு நேரம் அதிகமாகின்றது. 

ஆனால் இதற்காகவும் ரயில்வே பல விதிகளை வகுத்துள்ளது. இதைப் பற்றி மக்களுக்கு அதிகம் தெரியாது. நீங்கள் பயணிக்கும் ரயில் இலக்கை அடைவது தாமதமானால், நீங்கள் தெரிந்து வைத்திருக்கக்கூடிய சில விதிகள் மற்றும், நிபந்தனைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். இவற்றை தெரிந்துகொள்வது பயணிகளுக்கு மிக உதவியாக இருக்கும். 

முழுமையாக ரீஃபண்ட் கிளெயிம் செய்யலாம்

இந்திய ரயில்வே விதிகளின்படி, ரயில் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற (ரீஃபண்ட் பெற) உரிமை உண்டு. ரயில் 3 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால், பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை கேன்சல் செய்து, முழு டிக்கெட் பணத்தையும் திரும்பக் கோரலாம். இது இப்போது கவுண்டர் டிக்கெட் மற்றும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கிற்கும் பொருந்தும். உங்கள் டிக்கெட் நிலை கன்ஃபர்ம், RAC அல்லது காத்திருப்பு (வெயிட்டிங்) ஆகியவற்றின் படியும் இந்த வசதி கிடைக்கும். எனவே, உங்கள் டிக்கெட் கன்ஃபர்ம் அதாவது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டாக இருந்து, ரயில் தாமதமானால், நீங்கள் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

இப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள்

- உங்களிடம் கவுண்டர் டிக்கெட் இருந்து, ரயில் 3 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால், அதே நிலையத்தின் டிக்கெட் கவுண்டருக்குச் சென்று உங்கள் டிக்கெட்டை ரத்து செய்து, அதாவது கேன்சல் செய்து முழு பணத்தையும் திரும்பப் பெறலாம்.

- நீங்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், ஆன்லைனில் TDR (டிக்கெட் டெபாசிட் ரசீது) படிவத்தை நிரப்ப வேண்டும். TDR படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, டிக்கெட் தொகையில் பாதி உடனடியாக உங்களுக்கு கிடைக்கும், மீதமுள்ள தொகை ரயில் பயணம் முடிந்ததும் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க | Indian Railways அட்டகாசமான அப்டேட்: இனி ரயில்களில் இலவச உணவு.. குஷியில் பயணிகள்

TDR -ஐ ஆன்லைனில் இப்படி பதிவு செய்யுங்கள்

- IRCTC கணக்கில் லான் இன் செய்யவும்.

- "புக்ட் டிக்கெட் ஹிஸ்டரி” என்பதைக் கிளிக் செய்யவும்.

- TDR -ஐப் பதிவு செய்ய, குறிப்பிட்ட டிக்கெட்டின் (பிஎன்ஆர்) PNR -ஐக் கிளிக் செய்து, பின்னர் "ஃபைல் TDR" என்பதைக் கிளிக் செய்யவும்.

- TDR -ஐப் பெற, நீங்கள் பணத்தைத் திரும்பப்பெற விரும்பும் பயணியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

- TDR -ஐ தாக்கல் செய்வதற்கான காரணங்களின் பட்டியலிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கவும் அல்லது "மற்றவை" என்பதைக் கிளிக் செய்து அந்த காரணத்தை உள்ளிடவும்.

- இப்போது "சப்மிட்" பொத்தானைக் கிளிக் செய்யவும்.

- நீங்கள் "மற்றவை" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால், ஒரு உரை பெட்டி திறக்கும். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான காரணத்தை அங்கே எழுதி சமர்ப்பிக்கவும்.

- TDR ஃபைலிங் உறுதிப்படுத்தல் பக்கத்தில், அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்.

- "சரி" என்பதைக் கிளிக் செய்யவும்.

- TDR நுழைவு (TDR Entry) உறுதிப்படுத்தல் பக்கத்தில், PNR எண், பரிவர்த்தனை ஐடி, குறிப்பு எண், TDR நிலை மற்றும் காரணம் ஆகியவை தோன்றும்.

மேலும் படிக்க | ரயில் பயணத்தின் போது பிரச்சனையா? அப்போ இந்த செய்தியை கட்டாயம் படியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News