உச்சத்தில் வெங்காயம் விலை; மத்திய அரசு தூங்குகிறதா? -பிரியங்கா!

உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் வெங்கயாம் விலை ஏற்றம் குறித்து மத்திய அரசினை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

Last Updated : Dec 9, 2019, 02:25 PM IST
  • வெங்காயம் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்து வருவது குறித்து நாட்டில் பொது மக்களிடையே பெரும் கூச்சல் நிலவுகிறது.
  • பிரியங்கா காந்தி வாத்ரா பணவீக்கம் தொடர்பாக மத்திய அரசைத் சாடியுள்ளார். பெட்ரோல் மற்றும் வெங்காயத்தின் விலை ஏற்றம் குறித்து பிரியங்கா காந்தி பாஜக அரசை குறிவைத்துள்ளார்.
உச்சத்தில் வெங்காயம் விலை; மத்திய அரசு தூங்குகிறதா? -பிரியங்கா! title=

உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் வெங்கயாம் விலை ஏற்றம் குறித்து மத்திய அரசினை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

வெங்காயம் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்து வருவது குறித்து நாட்டில் பொது மக்களிடையே பெரும் கூச்சல் நிலவுகிறது. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை சட்டை செய்யவில்லை. இந்நிலையில் திங்களன்று, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா பணவீக்கம் தொடர்பாக மத்திய அரசைத் சாடியுள்ளார். பெட்ரோல் மற்றும் வெங்காயத்தின் விலை ஏற்றம் குறித்து பிரியங்கா காந்தி பாஜக அரசை குறிவைத்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி வாத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., 'பணவீக்கம் பொதுமக்களை தொந்தரவு செய்துள்ளது. வெங்காயம் பல இடங்களில் 200-னை தாண்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் 75-னை தாண்டியுள்ளது. பாஜக அரசு இப்போது தூக்க மனநிலையில் இருப்பதாக தெரிகிறது', என குறிப்பிட்டுள்ளார். 

பிரியங்கா வாத்ரா தலைமையில் உன்னாவ் வழக்கில் அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு முழு எதிர்க்கட்சியும் ஆதரவளிப்பதாக ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சி கூறியது,. இதுபோன்ற நடவடிக்கை காங்கிரஸால் செய்யப்படும் என்று எதிர்க்கட்சியும் அரசாங்கமும் எதிர்பார்க்கவில்லை என்று காங்கிரஸ் கூறியிருந்தது. காங்கிரஸ் இப்போது உத்திரபிரதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது, இது பொதுமக்களின் பிரச்சினைகளை கனத்த குரலில் ஒலிக்கிறது. 

போராட்டத்தின் போது, ​​காங்கிரஸ் தலைவர் ஜடின் பிரசாத் கைது செய்யப்பட்டார். "எதிர்க்கட்சி எங்கே? நாங்கள் ஒவ்வொரு நாளும் பொது பிரச்சினைகளை எழுப்புகிறோம். நாங்கள் தான் மாநிலத்தில் எதிர்க்கட்சி," என்று அவர் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Trending News