தங்கத்தின் விலையை உயரச் செய்த பங்குச்சந்தையின் சரிவு! சென்செக்ஸ் நிஃப்டி சரிவு

Sensex - Nifty As On Oct 26: பங்குச்சந்தையில் , பிஎஸ்இ சென்செக்ஸ் 901 புள்ளிகள் அல்லது 1.41 சதவீதம் சரிந்து 63,148.15 புள்ளியில் முடிவடைந்தது. என்எஸ்இ நிஃப்டி 18,900 நிலைக்கு சரிந்தது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 26, 2023, 05:27 PM IST
  • சென்செக்ஸ் நிஃப்டி சரிந்தது
  • தங்கத்தின் விலையில் கணிசமான உயர்வு
  • பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்
தங்கத்தின் விலையை உயரச் செய்த பங்குச்சந்தையின் சரிவு! சென்செக்ஸ் நிஃப்டி சரிவு title=

மும்பை: வியாழன் (அக்டோபர் 26) அன்று நடந்த ஆறாவது தொடர் அமர்வில் அக்டோபர் தொடருக்கான எதிர்கால மற்றும் விருப்பங்கள் (F&O) ஒப்பந்தங்களின் கடைசி நாளாக இருந்ததால் சந்தையும் ஏற்ற இறக்கமாக இருந்தது. எஸ் அண்ட் பி பிஎஸ்இ சென்செக்ஸ் 901 புள்ளிகள் அல்லது 1.41 சதவீதம் சரிந்து 63,148.15 இல் நிலைத்தது, அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 18,900 நிலைக்கு கீழே சரிந்து 64.9 புள்ளிகள் அல்லது 1.39 சதவீதம் குறைந்து 18,857.25 புள்ளிகளில் நிறைவடைந்தது.

எம்&எம், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை 50-ஸ்கிரிப் ப்ளூ-சிப் பேஸ்கெட்டில் அதிக நஷ்டம் அடைந்துள்ளன.
எம்&எம், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் யுபிஎல் ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன. பரந்த அடிப்படையிலான பலவீனத்திற்கு மத்தியில் நிஃப்டி கூடையில் கிட்டத்தட்ட 4-3 சதவீதம் சரிந்தன. மறுபுறம், ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ் மற்றும் எச்.சி.எல் டெக் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.

CIE Automotive, VPRPL, MRPL பங்குகள் இலாபம் கொடுக்குமா?
சிஐஇ ஆட்டோமோட்டிவ் பங்குகளை ரூ.475க்கு ஸ்டாப் லாஸ்ஸுடன் ரூ.445க்கு வாங்கலாம். ரூ.205க்கு விபிஆர்பிஎல் பங்குகளை வாங்கலாம், எம்ஆர்பிஎல் பங்குகளும் லாபம் தரும் என்று பங்குச்சந்தை (Share Market) நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.  

ஏசியன் பெயிண்ட்ஸ்

வியாழன் (அக்டோபர் 26) அன்று ஏசியன் பெயிண்ட்ஸ் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை அறிவித்தது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.803.83 கோடியாக இருந்த வரிக்குப் பிந்தைய லாபம் 53.31 சதவீதம் உயர்ந்து ரூ.1,232.39 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

ஆக்சிஸ் வங்கியின் பங்குகள்

தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் வியாழக்கிழமை (26 அக்டோபர் 2023) பச்சை நிறத்தில் முடிவடைந்தது. இரண்டாவது காலாண்டில் வங்கி ரூ.5864 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதனையடுத்து ஆக்சிஸ் வங்கியின் பங்குகளை வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 6 மாதங்களில் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் சுமார் 11 சதவிகிதம் லாபம் கொடுத்துள்ள நிலையில் இன்று, வங்கிப் பங்குகளின் விலை1.89 சதவீதம் உயர்ந்து 973.55 ஆக முடிவடைந்தன.

ஆக்சிஸ் வங்கி: 1250 அடுத்த இலக்கு

ஆக்சிஸ் வங்கியில் வாங்க CLSA அறிவுறுத்தியுள்ளது. ஒரு பங்குக்கு 1200 ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் காலாண்டில் நிகர வட்டி வரம்பு நிலையானதாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.   

மேலும் படிக்க | பங்குச்சந்தையின் புதிய ரிகார்ட் பிரேக்! இதுவரை இல்லாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை 

தங்கம் விலை

2023, அக்டோபர் 26ம் தேதியான இன்று இந்தியாவில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 52,785 ரூபாயாகவும், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 47,750 ரூபாயாகவும் உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 45,600 ரூபாய் மற்றும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5700 ரூபாயாகவும் உள்ளது.

(குறிப்பு - பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.)

மேலும் படிக்க | 25 பைசாவிலிருந்து ரூ.280...  எகிறும் பிக்காடிலி ஆக்ரோ பங்கு விலைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News