கிரெடிட் கார்டு பில்லுக்கு பணம் கட்டுவதில் தாமதமா? இப்படி செய்தால் பிரச்சனை இல்லை

Non Payment Of Credit Card Cost You More: கிரெடிட் கார்டுகளுக்கு தாமதமாகப் பணம் செலுத்தினால், வட்டி மட்டுமல்ல வேறு சில சிக்கல்களும் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 7, 2023, 08:13 PM IST
  • கிரெடிட் கார்டுகளுக்கு தாமதமாகப் பணம் செலுத்துவது
  • தாமதமாக கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதன் விளைவுகள்
  • இன்சூரன்ஸ் நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்காது
கிரெடிட் கார்டு பில்லுக்கு பணம் கட்டுவதில் தாமதமா? இப்படி செய்தால் பிரச்சனை இல்லை title=

கிரெடிட் கார்டுகள் ஒரு கவர்ச்சிகரமான நிதி விருப்பமாகும், குறிப்பாக பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் போது கைகொடுத்து உதவும் என்பதால் இன்று கிரெடிட் கார்டு பயன்பாடு அவசியமானதாகிவிட்டது. ஆனால், கிரெடிட் கார்டுகளிலிருந்து அதிகபட்ச பலன்களைப் பெறுவதற்கு, ஒருவர் பயன்படுத்திய கிரெடிட் கார்டுக்கான கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்துவது முக்கியம் ஆகும்.

கிரெடிட் கார்டு பில்லை, காலதாமதமாக செலுத்தினாலோ அல்லது பணம் செலுத்தாமல் இருந்தாலோ, அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.கிரெடிட் கார்டுகளுக்கு தாமதமாகப் பணம் செலுத்தினால், வட்டி மட்டுமல்ல வேறு சில சிக்கல்களும் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுக் காப்பீடு, போனஸ் பாயிண்ட்ஸ், கடன் வரம்பு மற்றும் பலவற்றில் பிரச்சனை ஏற்படும்.  

கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நபரின் புதிய கடன்களை வாங்குவதற்கும் ஏற்கனவே உள்ள நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கும் உள்ள திறனைக் குறிக்கிறது. சரியான நேரத்தில் பணம் கட்டாததால், எதிர்காலத்தில் கடன் வாங்கும்போது உங்களுக்கு சிக்கல் அதிகரிக்கும். கடனுக்கான தகுதி குறையும். 

மேலும் படிக்க | ஜாக்பாட் திட்டம்... மலிவு விலையில் மருந்துகள் - கூடவே வேலைவாய்ப்பும்!
 
பொது காப்பீட்டில் நோ-கிளைம் போனஸ்
நோ-கிளைம் போனஸ் என்பது ஒரு பாலிசி ஆண்டில் தனிநபர் எந்தவொரு இன்சூரன்ஸ் க்ளெய்மும் எடுக்கவில்லை என்றால் காப்பீடு வழங்குநர்கள் வழங்கும் வெகுமதி ஆகும். வாகனம் மற்றும் உடல்நலக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு இது பொருந்தும். கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை தாமதமாகினாலோ அல்லது செலுத்தப்படாமலோ இருந்தால், கார்டு வைத்திருப்பவர் காப்பீட்டின் மீதான நோ க்ளைம் போனஸை இழக்க நேரிடும்.

கடன் வரம்பு மற்றும் கடன் மதிப்பெண்
கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நபரின் புதிய கடன்களை வாங்குவதற்கும் ஏற்கனவே உள்ள நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கும் உள்ள திறனைக் குறிக்கிறது. இது 300 முதல் 900 வரையிலான வரம்பில் உள்ளது மற்றும் கடன் ஏஜென்சிகள் மற்றும் கடன் வழங்குபவர்களால் ஒரு தனிநபரால் ஏதேனும் புதிய கடன் எடுக்க முடியுமா என்பதைக் கணக்கிட பயன்படுத்தப்படுகிறது.

750 மற்றும் அதற்கு மேல் உள்ள கிரெடிட் ஸ்கோர் குறைந்த வட்டி விகிதங்களில் கடனைப் பெறுவதற்கு நல்லதாகக் கருதப்படுகிறது. கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை செலுத்தாதது ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கலாம். இது அவர்களின் கடன் வரம்பை அல்லது அவர்களின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அவர்கள் செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகையை குறைக்கலாம்.

பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அட்டை வழங்குபவர்கள் கிரெடிட் கார்டில் செலுத்த வேண்டிய பிரீமியத்தையும் அதிகரிக்கலாம்.

போனஸ் பாயிண்ட்ஸ்
பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், தனிநபர் ஒருவரால் கிரெடிட் கார்டில் சேர்ந்துள்ள வெகுமதி புள்ளிகள் குறைக்கப்படலாம். கார்டு வழங்குபவர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால் கொடுத்த வெகுமதியை திரும்பப் பெறலாம்  

கிரெடிட் கார்டு பில்லுக்கு பணம் கட்டுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பது எப்படி?
ஒரு நபர் தனது வங்கிக் கணக்கில் தானியங்கி பணம் செலுத்தும் விருப்பத்தை இயக்கினால், கிரெடிட் கார்டு பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கலாம். இதன் மூலம் அவர்களின் பில்கள் சரியான நேரத்தில் செலுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும்.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், திருப்பிச் செலுத்தும் திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் மற்றும் அவர்களின் வருமானத்தில் ஒரு பகுதி கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்காக ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது அவர்களின் கிரெடிட் கார்டு தவணைகளை சரியான சமயத்தில் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும்.  

மேலும் படிக்க | Post Office Scheme: வெறும் ரூ.10,000 டெபாசிட் செய்து, ரூ.16 லட்சத்தை இந்தத் திட்டத்தில் பெறுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News