PPF திட்டத்தில் பணம் போடுகிறீர்களா? அப்படியென்றால் இதில் கவனம் தேவை

Public Provident Fund Scheme: உங்கள் பிபிஎஃப் கணக்கில் எவ்வளவு வட்டி கிடைக்கும்? அதன் கணக்கீட்டில் 5ஆம் தேதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2023, 12:25 PM IST
  • சிறிய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள் என்ன?
  • சிறு சேமிப்புத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன.
  • எனவே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் உறுதியான வருமானத்தை அனுபவிக்க முடியும்.
PPF திட்டத்தில் பணம் போடுகிறீர்களா? அப்படியென்றால் இதில் கவனம் தேவை title=

Public Provident Fund Scheme: பிபிஎஃப் நிதியில் முதலீடு செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி வருகிறது. ஆனால், பிபிஎஃப் -க்கும் 5 ஆம் தேதிக்கும் ஒரு பெரிய தொடர்பு உள்ளது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த தேதியில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பணியை செய்தால் அதனால் நமக்கு ஆதாயம் கிடைக்கும். இது தொடர்பான தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பிபிஎஃப் (PPF) திட்டத்தில், வட்டி விகிதங்கள் மாத அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. வட்டித் தொகை நிதியாண்டின் இறுதியில் வரவு வைக்கப்படும். உங்கள் பிபிஎஃப் கணக்கில் எவ்வளவு வட்டி கிடைக்கும்? அதன் கணக்கீட்டில் 5ஆம் தேதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

5ம் தேதிக்கு முன் இதை செய்தால் அதிக வட்டி கிடைக்கும்

ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி மற்றும் மாதத்தின் கடைசி தேதியான 30 அல்லது 31 க்கு இடையில் உங்கள் பிபிஎஃப் கணக்கின் இருப்புக்கு வட்டி செலுத்தப்படும். இந்த காரணத்திற்காக, நீங்கள் 5 ஆம் தேதிக்கு முன் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அப்படி செய்தால்,  உங்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்.

எவ்வளவு வட்டி பெறப்படுகிறது?

பிபிஎஃப் -இல் 7.1 சதவிகிதம் வட்டி கிடைக்கும். மாதத்தின் 5ஆம் தேதிக்கு முன்னதாக தொகையை சேர்த்தால் அதற்கான வட்டி அந்த மாதமே கணக்கிடப்படும். 5ஆம் தேதிக்குப் பிறகு நீங்கள் எந்தப் பணத்தை டெபாசிட் செய்தாலும் அதற்கு அடுத்த மாதத்திலிருந்துதான் வட்டி கிடைக்கும்.

மேலும் படிக்க | 50,100,200,500 ரூபாய் நோட்டு... ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: உடனே தெரிந்துகொள்ளுங்கள்

எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை உதாரணத்துடன் புரிந்து கொள்ளுங்கள்?

ஏப்ரல் 5 அல்லது அதற்கு முன் பிபிஎஃப் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்திருந்தால். அத்தகைய சூழ்நிலையில், 7.1 சதவீத வட்டி விகிதத்தில் மொத்தம் ரூ.10,650 கிடைக்கும். அதே நேரத்தில், ஏப்ரல் 6 அல்லது அதற்குப் பிறகு நீங்கள் இந்த பணத்தை டெபாசிட் செய்திருந்தால், உங்களுக்கு 11 மாதங்களுக்கு மட்டுமே வட்டி கிடைக்கும். இந்நிலையில் வட்டியாக ரூ.9,763 கிடைக்கும். அதாவது சுமார் 887 ரூபாய் குறைந்த வட்டி கிடைக்கும்.

சிறிய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள் என்ன? 

பொருளாதார நிலையற்ற தன்மை இருக்கும் நிலையில், சிறு சேமிப்புத் திட்டங்களில் சில பகுதியை முதலீடு செய்வது, ஒரு நல்ல செயலாக இருக்கும். குறிப்பாக எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை பெற விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று தனி நபர் நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்தத் திட்டங்களுக்கான வருமானம் ஈக்விட்டிகளைப் போல லாபகரமானதாக இருக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஆனால், இவற்றில் இருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால், இவை அதிக ஆபத்து இல்லாத முதலீட்டு முறைகளாக உள்ளன.  

சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூன்று நன்மைகள்

1) சிறு சேமிப்புத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன. எனவே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் உறுதியான வருமானத்தை அனுபவிக்க முடியும்.

2) PPF மற்றும் SCSS போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் பல வருமான வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை பலன்களைப் பெறலாம். 

மேலும் படிக்க | மாதா மாதம் 1 லட்சம் ஓய்வூதியம்: அள்ளித்தரும் NPS... இப்படி முதலீடு செய்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News