முக்கிய செய்தி: பிஎஃப் தொகைக்கும் வரி விதிக்கப்படுமா? எவ்வளவு? உடனே தெரிந்துகொள்ளுங்கள்

EPFO Update: இபிஎஃப் தொகைக்கு வரி விதிக்கப்படுமா? இபிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கு எப்போது வரி விதிக்கப்படுகிறது? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 25, 2023, 08:48 AM IST
  • இபிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கு எப்போது வரி விதிக்கப்படுகிறது?
  • முழு தொகைக்கும் வரி உண்டா?
  • இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
முக்கிய செய்தி: பிஎஃப் தொகைக்கும் வரி விதிக்கப்படுமா? எவ்வளவு? உடனே தெரிந்துகொள்ளுங்கள் title=

EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை அவர்களது இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். ஊழியர் டெபாசிட் செய்யும் அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்யும்.

இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு இபிஎஃப்  விதிகள் தொடர்பான பல சந்தேகங்கள் இருப்பதுண்டு. அதில் முக்கியமான சந்தேகம் வரி விதிப்பு பற்றியது. இபிஎஃப்ஓ -வில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வரி விதிக்கப்படுமா இல்லையா என்பது பலருக்கு பெரும் குழப்பமாகவே உள்ளது. இது குறித்த முழுமையான தகவல் பலருக்கு தெரிவதில்லை. இபிஎஃப் தொகைக்கு வரி விதிக்கப்படுமா? இபிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கு எப்போது வரி விதிக்கப்படுகிறது? முழு தொகைக்கும் வரி உண்டா? இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

வருங்கால வைப்பு நிதி (PF) அல்லது பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஓய்வுக்குப் பிறகும் பணத்தைச் சேமிக்க பலரால் நம்பப்பட்டு பயன்படுத்தப்படும் மிகவும் விருப்பமான தீர்வாகும். ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் பன்னிரண்டு சதவீதத்தை இந்த நிதியில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொக்கையை நிறுவனமும் செலுத்துகிறது. இந்த நிதியில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசு வட்டியும் செலுத்துகிறது.

வீட்டு வாடகை மற்றும் வங்கிக் கணக்கில் பெறும் வட்டிக்கு வருமான வரித்துறை வரி விதிக்கிறது. பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கும் வரி விதிக்கப்படுகிறது. இபிஎஃப் கணக்கிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. பிஎஃப் -இலிருந்து பணம் எடுப்பதற்கு எப்போது வரி விதிக்கப்படுகிறது என்பது பற்றி இங்கே காணலாம். 

மேலும் படிக்க | ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அளிக்கும் பம்பர் சலுகை... விமான கட்டணத்தில் 30% தள்ளுபடி...

இபிஎஃப் கணக்கு விதிகள்

இபிஎஃப் விதிகளின்படி, பிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கு முன் ஊழியர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஓய்வுக்குப் பிறகுதான் முழுத் தொகையையும் பிஎஃப் நிதியில் இருந்து எடுக்க முடியும். இதற்கான வயது வரம்பை இபிஎஃப்ஓ 55 ஆண்டுகள் என்று அறிவித்துள்ளது. ஓய்வு பெறுவதற்கு முன், ஒரு ஊழியர் பிஎஃப் நிதியில் இருந்து 90 சதவீதம் மட்டுமே எடுக்க முடியும்.

அதே நேரத்தில், ஒரு நபருக்கு வேலை போய்விட்டால், அவர் பிஎஃப் நிதியிலிருந்து முதல் முறையாக 75 சதவீதத்தையும், இரண்டாவது முறையாக முழுத் தொகையையும் எடுக்கலாம். பிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கு முன் சில ஆவணங்களை நிரப்ப வேண்டும் என்பதை அனைத்து ஊழியர்களும் நினைவில் கொள்ள வேண்டும். இது தவிர, பிஎஃப் நிதியிலிருந்து தொகையை திரும்பப் பெறுவது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.  

இபிஎஃப் -இல் இருந்து பணம் எடுப்பதற்கு எப்போது வரி விதிக்கப்படும்?

இபிஎஃப் கணக்கில் (PF Account) பொதுவாக கூற வேண்டுமானால் எந்த வரியும் விதிக்கப்படாது. வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் வரி விலக்கு கோரலாம். வேறு ஏதேனும் மூலத்திலிருந்து வருமானம் அல்லது பணியாளரின் பங்களிப்பின் மீது வட்டி பெறப்பட்டால் வரி விதிக்கப்படும்.

கூடுதலாக, நிறுவனத்தின் பங்களிப்புகள் மற்றும் வட்டி ஆகியவை வரிக்கு உட்பட்டவை. ஒரு ஊழியர் 5 ஆண்டுகள் ஆவதற்கு முன்பு பிஎஃப் நிதியில் இருந்து பணத்தை எடுத்தால் டிடிஎஸ் (TDS) கழிக்கப்படும். அதே நேரத்தில், ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுத்தால், அவருக்கு வரி விதிக்கப்படாது.

மேலும் படிக்க | EPFO Online Claim தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறதா? எளிய ஆன்லைன் வழிமுறையை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News