பிஎஃப் கணக்கில் அதிரடி ஏற்றம், வந்தது கூடுதல் தொகை: இப்படி செக் பண்ணுங்க

EPFO Update: இபிஎஃப் -இல் பங்களிக்கும் அனைவரும் தங்கள் ஓய்வூதியச் சேமிப்பைக் கண்காணிக்க, பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு இருப்பை அறிந்து கொள்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 15, 2023, 10:43 AM IST
  • இபிஎஃப்ஓ டிஜிட்டல் தளம் மூலம் செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
  • இபிஎஃப்ஓ போர்ட்டல், உமங் மொபைல் ஆப், மிஸ்ட் கால் அல்லது எஸ்எம்எஸ் சேவைகள்.
  • இபிஎஃப் ​​இருப்பை சரிபார்க்கும் முறைகள் பற்றி இங்கே விரிவாக காணலாம்.
பிஎஃப் கணக்கில் அதிரடி ஏற்றம், வந்தது கூடுதல் தொகை: இப்படி செக் பண்ணுங்க title=

EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2022-23 நிதி ஆண்டிற்கான வட்டியை இபிஎஃப் கணக்குகளில் டெபாசிட் செய்யத் தொடங்கியுள்ளது. இபிஎஃப்ஓ வட்டி பணத்தை வரவு வைப்பதால், பிஎஃப் சந்தாதாரர்களின் மொத்த பிஎஃப் இருப்பில் அதிகரிப்பு ஏற்படும். பிஎஃப் கணக்குகளில் வட்டி வரவு வைப்பது தொடர்பாக எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) -இல் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில், ஒழுங்குமுறை அமைப்பு, "வட்டியை கணக்குகளில் வரவு வைப்பதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது. இந்த தொகையை சந்தாதாரர்கள் விரைவில் தங்கள் கணக்குகளில் காண முடியும். வட்டி மொத்தமும் சேர்க்கப்பட்டு ஒன்றாக வரவு வைக்கப்படும். யாருக்கும் வட்டி இழப்பு ஏற்படாது. சந்தாதார்ரர்கள் பொறுமையாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியிருந்தது.

இபிஎஃப் -இல் பங்களிக்கும் அனைவரும் தங்கள் ஓய்வூதியச் சேமிப்பைக் கண்காணிக்க, பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு இருப்பை அறிந்து கொள்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. இபிஎஃப்ஓ டிஜிட்டல் தளம் மூலம் இதற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளது. இபிஎஃப்ஓ போர்ட்டல், உமங் மொபைல் ஆப், மிஸ்ட் கால் அல்லது எஸ்எம்எஸ் சேவைகள் போன்ற பல்வேறு முறைகள் மூலம் பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் இருப்பை செக் செய்யலாம். 

இபிஎஃப் ​​இருப்பை சரிபார்க்கும் முறைகள் பற்றி இங்கே விரிவாக காணலாம்: 

- இபிஎஃப் இருப்பை இபிஎஃப்ஓ போர்ட்டல் மூலம் செக் செய்யலாம்.

- இதற்கு முதலில் www.epfindia.gov.in என்ற இபிஎஃப்ஓ போர்டலுக்கு செல்லவும்.

- "எங்கள் சேவைகள்" டேபின் இ-பாஸ்புக் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- இது உங்களை புதிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

- இதில் லாக் இன் செய்ய உங்கள் பயனர் பெயர் (UAN), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

- வெற்றிகரமாக லாக் இன் செய்த பின்னர், ‘பாஸ்புக்கைக் காண்க’ என்பதைக் கிளிக் செய்யவும்.

- இருப்பு தொகையை (EPF Balance) சரிபார்க்க 'நிறுவனத்தை' தேர்ந்தெடுக்கவும்.

- அதன் பிறகு உங்கள் EPF இருப்பு திரையில் காட்டப்படும்.

மேலும் படிக்க | மீண்டும் பழைய ஓய்வூதியம்!! ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஜாக்பாட்!!

உமங் செயலி மூலம் இந்த வகையில் செக் செய்யலாம்

- உமங் ஆப் பல அரசு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது.

- EPF-க்கு, Google Play Store அல்லது Apple App Store இலிருந்து UMANG செயலியை பதிவிறக்கவும்.

- உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.

- பின்னர், "அனைத்து சேவைகள்" டேபின் கீழ், 'EPFO' ஐத் சர்ச் செய்யவும்.

- 'பணியாளர் மைய சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- பின்னர் ‘பாஸ்புக்கைக் காண்க’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட UAN மற்றும் OTP ஐ உள்ளிடவும்.

- இதில் லாக் இன் செய்தவுடன் நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் EPF இருப்பைக் காணலாம்.

எஸ்எம்எஸ் மூலமாகவும் செக் செய்யலாம் 

இந்த சேவைக்கு உங்கள் UAN எண்ணை உங்கள் KYC விவரங்களுடன் (ஆதார் அல்லது பான்) இணைக்க வேண்டும். அது ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால், 7738299899 என்ற எண்ணுக்கு “EPFOHO UAN ENG” வடிவத்தில் SMS அனுப்பி பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் இருப்பை செக் செய்யலாம். ‘ENG’ என்பது ஆங்கிலத்தில் செய்திகளைப் பெறுவதற்கானது. உங்களுக்கு எந்த மொழியில் செய்தியை பெற வேண்டுமோ அந்த மொழியின் முதல் மூன்று எழுத்துகளை ‘ENG’ -க்கு பதில் எழுதி அனுப்பினால், அந்த மொழியில் செய்தி கிடைக்கும். 

பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் இருப்பைக் கண்காணிப்பது சேமிப்பின் துல்லியமான மதிப்பீட்டை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இபிஎஃப் கணக்கில் உள்ள தொகை ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. அகையால் அதை திறம்பட நிர்வகிப்பது மற்றும் அதன் நிலையை கண்காணிக்க வேண்டியது அவசியம். EPFO போர்ட்டல், எஸ்எம்எஸ், மிஸ்ட் கால் அல்லது உமங் ஆப் மூலம் உங்கள் இபிஎஃப் இருப்பை தவறாமல் சரிபார்ப்பது பயனுள்ள நிதித் திட்டமிடலை உறுதி செய்கிறது. 

மேலும் படிக்க | 44% ஊதிய உயர்வுடன் அதிரடியாய் வருகிறது அடுத்த ஊதிய கமிஷன்: மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News