EPS-95 இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும்: வலுக்கும் ஓய்வூதியதாரர்களின் போராட்டம்

EPFO Update: தற்போது இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆகும். EPFO செப்டம்பர் 1, 2014 முதல் தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கு இதை செலுத்தி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 13, 2024, 03:19 PM IST
  • EPFO இலிருந்து அகவிலைப்படியுடன் குறைந்தபட்சம் 7,500 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் கோரி ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஓய்வூதியதாரர்கள் நாடு முழுவதும் உள்ள 110 இபிஎஃப்ஓ அலுவலகங்களில் போராட்டம் நடத்தினர்.
  • போராட்டக் குழுவின் தேசியத் தலைவர் கமாண்டர் அசோக் ராவத் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் வீரேந்திர சிங் ரஜாவத் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
EPS-95 இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும்: வலுக்கும் ஓய்வூதியதாரர்களின் போராட்டம் title=

EPFO Update: ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (EPS-95) இன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஜனவரி 12, 2024 அன்று நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) 110 அலுவலகங்களுக்கு வெளியே எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர். EPFO இலிருந்து அகவிலைப்படியுடன் குறைந்தபட்சம் 7,500 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் கோரி இந்த ஓய்வூதியதாரர்கள் (Pensioners) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தற்போதுள்ள குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் என்ன?

தற்போது இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆகும். EPFO செப்டம்பர் 1, 2014 முதல் தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கு இதை செலுத்தி வருகிறது. EPS-95 திட்டம் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 78 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் உள்ளனர்.

இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழுவின் கீழ் (EPS-95 National Movement Committee), ஓய்வூதியதாரர்கள் நாடு முழுவதும் உள்ள 110 இபிஎஃப்ஓ அலுவலகங்களில் மாதாந்திர குறைந்தபட்சத் தொகையை உயர்த்தக் கோரி போராட்டம் நடத்தினர். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை (Minimum Pension) அதிகரிப்பது தொடர்பாக தொழிலாளர் அமைச்சகம் (Labour Ministry) மற்றும் இபிஎப்ஓவின் அலட்சிய போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிலாளர் அமைச்சரிடம் அவர்கள் மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க | SIP: வெறும் 500 ரூபாயில் முதலீட்டை தொடங்கி 21 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவது எப்படி?

போராட்டக் குழுவின் அறிக்கையின்படி, டெல்லி பிகாஜி காமா பிளேஸில் அமைந்துள்ள இபிஎஃப்ஓ அலுவலகத்தில் போராட்டக் குழுவின் தேசியத் தலைவர் கமாண்டர் அசோக் ராவத் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் வீரேந்திர சிங் ரஜாவத் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அசோக் ராவத், 'கடந்த 6 ஆண்டுகளாக, ஓய்வூதியம் பெறுவோர் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் 7,500 ரூபாயாக உயர்த்துவது, அகவிலைப்படி (Dearness Allowance), ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணைக்கு இலவச மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.' என கூறினார்.

இதுதொடர்பாக தொழிலாளர் துறை அமைச்சர் பலமுறை உறுதியளித்து வருவதாகவும், பிரதமரும் இரண்டு முறை உறுதி அளித்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சர் பலமுறை உறுதியளித்த போதிலும், EPFO இதைப் பற்றி தீவிரமாக இல்லை என்று கூறப்படுகின்றது.

அந்த அறிக்கையின்படி, டெல்லியின் சமீபத்தில் ஜந்தர் மந்தரில் நடந்த உண்ணாவிரதம் தொழிலாளர் அமைச்சரின் உறுதிமொழியைப் பெற்ற பின் நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது ஓய்வூதியதாரர்களின் பொறுமை எல்லையை கடந்து விட்டது. பிரதமர் மோடி தனது உத்தரவாதத்தை நிறைவேற்றி, மனிதாபிமான அடிப்படையில் வயதான ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறினால் ஜனவரி 30-ஆம் தேதி முதல் மீண்டும் படிப்படியாக உண்ணாவிரதம் தொடங்கப்படும் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவை தொடரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)

அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சார்பில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம், அவர்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. பொதுவாக ஊழியர்களுக்கு இது ஓய்வூதிய நிதிக்கான முதல் படியாக இருக்கும். உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அந்த தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் கணக்கில் டெபாசிட் செய்யும். அந்த தொகைக்கு அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் வழங்குகிறது.

மேலும் படிக்க | Budget 2024: சம்பள வர்க்கத்திற்கு மிகப்பெரிய நிவாரணம்.. ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் வரம்பில் மாற்றம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News